Connect with us

விஜயகாந்திற்கு முன்பே அதை செய்த ராஜ்கிரண்!.. தர்மம் பண்றதுல போட்டி போட்ட நடிகர்கள்…

rajkiran vijayakanth

Cinema History

விஜயகாந்திற்கு முன்பே அதை செய்த ராஜ்கிரண்!.. தர்மம் பண்றதுல போட்டி போட்ட நடிகர்கள்…

Social Media Bar

தமிழ் சினிமாவில் கிராமத்து சாயலில் வந்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் தன்னை கதாநாயகனாக முன் நிறுத்திக் கொண்டவர் நடிகர் ராஜ்கிரண். வழக்கமான கிராமத்து ஆட்களுக்கு உடைய உடல் வாகுவுடன் பேச்சு வழக்குடன் சினிமாவிற்கு வந்ததால் அது கிராம மக்களிடையே எளிதாக அவரை பிரபலப்படுத்துவதற்கு உதவியாக இருந்தது.

பெரும்பாலும் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பிறகு பெரிய வள்ளல் என்று விஜயகாந்த்தைதான் கூறுவார்கள். ஏனெனில் விஜயகாந்த் அவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்திலும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு தினமும் அசைவ சாப்பாடு போடக்கூடியவர்.

ஆனால் விஜயகாந்த்துக்கு முன்பே இந்த விஷயத்தை ராஜ்கிரண் செய்துள்ளார். ராஜ்கிரண் சினிமாவில் தயாரிப்பாளராக ஆன பிறகு அவர் தயாரித்த அனைத்து திரைப்படங்களிலும் அவர் என்ன சாப்பிடுகிறாரோ அதே சாப்பாட்டைதான் பட குழுவில் உள்ள அனைத்து நபர்களுக்கும் கொடுத்துள்ளார்.

ஏன் இதை செய்தார் என்று ஒரு பேட்டியில் கூறும் பொழுது நான் சிறு வயது முதல் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை எனது அம்மா என்னை பணக்காரனை போல வளர்த்தார்கள். கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்தேன்.

ஆனால் படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி சென்னைக்கு வந்த பொழுதுதான் நாம் ஏழை என்பதே எனக்கு தெரிந்தது. சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்பட்டேன் அப்பொழுதுதான் ஒரு விஷயம் தெரிந்தது. உலகத்திலேயே பெரிய தானம் என்பது சாப்பாடு கொடுப்பதுதான்.

எனவேதான் நான் அதை செய்து வருகிறேன் என்று ராஜ்கிரண் கூறியுள்ளார் விஜயகாந்த் பலருக்கும் உதவி செய்த விஷயம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும், ராஜ்கிரண் இப்படி ஒரு உதவி செய்யக்கூடியவர் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகும்.

To Top