Cinema History
புரட்சி தலைவருக்கு மட்டுமே அந்த படம் ஓடும்!.. ரஜினியை கைவிட்ட மக்கள் எம்.ஜி.ஆரை மட்டும் கொண்டாடினர்.. எந்த படம் தெரியுமா!..
Actor MGR and Rajinikanth : சினிமாவை பொறுத்தவரை கேலிக்கைக்கான ஒரு துறைதான் சினிமா என்பதே. எனவே சினிமா வந்த காலம் முதலே மக்களுக்கு இருக்கும் அதிகப்பட்ச எதிர்பார்ப்பு அந்த படம் அவர்களுக்கு கேளிக்கையாக இருக்க வேண்டும்.
தூக்கம் வரவைக்க கூடாது. முதலில் தமிழ் சினிமா நாடக பாணியில் நகர்ந்து கொண்டிருந்தாலும் மாற வேண்டிய காலக்கட்டத்திற்கு ஏற்ப சினிமாவும் மாற வேண்டி இருந்தது. ஆனால் எம்.ஜி.ஆர் சிவாஜி காலக்கட்டம் முதலே மாறாமல் இருப்பது படத்தின் நேரம்தான். மூன்று மணி நேரத்திற்கு அதிகமாக படம் எடுக்க கூடாது என்பது அப்போது முதலே இருந்து வரும் விதியாகும்.
இந்த விதி எதற்கு என்றால் ஒரு திரைப்படம் பார்வையாளர்களை சோர்வடைய செய்ய கூடாது. படம் முடியும் வரை அவர்கள் உற்சாகமாக இருக்க வேண்டும். படம் அதிக நேரம் இருந்தால் அந்த படம் சோர்வை ஏற்படுத்திவிடும். எனவேதான் இந்த விதிமுறை. ஆனால் அந்த விதியை சில திரைப்படங்கள் மீறியுள்ளன.
அப்படி மீறிய திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் நடித்த நாடோடி மன்னன் திரைப்படமும் ஒன்று. நாடோடி மன்னன் திரைப்படத்தின் மொத்த நேரம் 3.45 மணி நேரம் ஆகும். இதனால் திரையரங்குகளிலும் படத்தை 4 காட்சிகள் ஓட்ட முடியாது என்கிற நிலை.
இதனால் படம் ஓடுவதிலும் சிக்கல் ஏற்படும். மக்கள் அவ்வளவு நேரம் படத்தை அமர்ந்து பார்ப்பார்களா என்பது சந்தேகமே. எனவே இந்த படத்தை குறைக்கலாம் என யோசித்தனர். ஆனால் எம்.ஜி.ஆர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
ஆனால் அந்த படம் சிறப்பான வெற்றியை கொடுத்தது. அதற்கு பிறகு அதே போல முழு நீள படத்தை ரஜினிகாந்த் நடித்தார். படையப்பாதான் அந்த திரைப்படம். ஆனால் 4 மணி நேரம் படத்தை மக்கள் பார்க்க மாட்டார்கள் என கமல் கொடுத்த ஆலோசனையை அடுத்து அந்த படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்