Tamil Cinema News
என் வாழ்க்கையில் நடந்த முதல் விஷயம்.. ராஷ்மிகாவின் பழைய காதலர் கொடுத்த பரிசு..!
ஒரு திரைப்படம் வேறு மொழியில் டப்பிங் ஆகி வெளியாகும் போது அந்த திரைப்படத்தின் டப்பிங் சரியாக இருக்க வேண்டும். இல்லை என்றால் படம் பெரிதாக வரவேற்பை பெறாமல் போய்விடும்.
எனவே ஒரு திரைப்படம் டப்பிங்கில் வெளிவந்து நல்ல வெற்றியை கொடுக்கிறது என்றால் அதில் டப்பிங் ஆர்டிஸ்டின் பங்கு என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. தற்சமயம் வெளியாகி பெரும் வெற்றி கொடுத்திருக்கும் புஷ்பா மற்றும் புஷ்பா 2 திரைப்படத்தில் கூட தமிழ் டப்பிங் சிறப்பாக செய்திருந்தனர்.
அதனால்தான் அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் தமிழில் அல்லு அர்ஜுன், பிரபாஸ், கே.ஜி.எஃப் யஸ் மாதிரியான பல வேற்று மொழி நடிகர்களுக்கு டப்பிங் செய்து வரும் ஆர்டிஸ்ட் சேகர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார்.
பிரபலமான ஆர்டிஸ்ட்:
அதில் அவர் கூறிய சில விஷயங்கள் மிகவும் வியப்பை ஏற்படுத்துவதாக இருந்தன. அதில் அவர் கூறும்போது என்னுடைய இத்தனை வருட டப்பிங் வாழ்க்கையில் ஒரு படத்திற்கு நன்றாக டப்பிங் செய்தேன் என்று வாழ்த்தி பரிசு கொடுத்த நபர் என்றால் அது ரக்ஷத் செட்டி அவர்கள்தான்.
ரக்ஷத் ஷெட்டி நடித்த அவனே ஸ்ரீமன் நாராயணா என்கிற திரைப்படத்தை நான் தமிழில் டப்பிங் செய்தேன். அதை கேட்டுவிட்டு என்னை சந்திக்க நேரில் வந்தார் ரக்ஷித் ஷெட்டி. நீங்கள் மிக அற்புதமாக டப்பிங் செய்கிறீர்கள் அதற்காக போனில் பாராட்டினால் அது உங்களை அவமானப்படுத்துவது போல் ஆகிவிடும் என்று கூறி நேரில் என்னை பாராட்டி விட்டு எனக்கு பரிசாக ஒரு ஆப்பிள் ஐபோனை கொடுத்துவிட்டு சென்றார்.
இதுவரை சினிமாவில் யாருமே இப்படி எனக்கு செய்தது கிடையாது என்று அவர் பகிர்ந்திருக்கிறார். கன்னடத்தில் மிகவும் பிரபலமான நடிகராக ரக்ஷித் ஷெட்டி இருந்து வருகிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் அறிமுகமான பொழுது அவருக்கும் ரக்ஷித் ஷெட்டிக்கும் காதல் ஏற்பட்டு நிச்சயதார்த்தம் வரை சென்று பிறகு நின்று விட்டது.
