கேஜிஎஃப் இயக்குனரால் இவ்வளவு கோடி நஷ்டமா..? – ஓப்பனாக சொன்ன ராம்கோபால் வர்மா!

கன்னட இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் யஷ் நடித்து வெளியான படம் கேஜிஎஃப் அத்தியாயம் 2.

2018ல் கேஜிஎஃப் முதல் பாகம் வெளியானதிலிருந்தே இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில் கடந்த மாதம் 14ம் தேதி வெளியான கேஜிஎஃப் 2 பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றது.

படம் வெளியாகி இரண்டு வாரங்களை கடந்து விட்ட போதிலும் இன்னமும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வரும் கேஜிஎஃப் 2, இதுவரை உலக அளவில் ரூ.1000 கோடியை தாண்டி கலெக்சனை அள்ளியுள்ளது.

கேஜிஎஃப் வெற்றியை தொடர்ந்து மேலும் பல பிரம்மாண்ட படங்களும் தங்களது ஸ்க்ரிப்டை மாற்றி அமைத்து வருகின்றன.

கேஜிஎஃப் 2 வெற்றி குறித்து பேசியுள்ள இயக்குனர் ராம்கோபால் வர்மா “பிரசாந்த் நீல் சார் நீங்கள் குவிண்டால் கணக்கில் பணத்தை குவித்துள்ளீர்கள். ஆனால் உங்களால் இந்திய சினிமா பல 100 டன் பணத்தை அவர்கள் எடுக்கும் படத்தை ரீ ஷூட் செய்வதற்கும், ஸ்க்ரிப்டை மாற்றுவதற்கும், புது ஐடியாக்களை படத்தில் இறக்குவதற்கும் இழந்து வருகிறது. ஆனால் அவர்களுக்கு தெரியாது கேஜிஎஃப் ஏன் ஹிட் அடித்தது என்று” என தெரிவித்துள்ளார்.

கேஜிஎஃப் 2ன் வெற்றிக்கு பிறகு புஷ்பா உள்ளிட்ட படங்களில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஸ்க்ரிப்ட் மாற்றியமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Refresh