Connect with us

காசுக்கு ஆசைப்பட்டு ரம்பா கணவர் செய்த ஊழல்!.. இப்ப பல பிரபலங்களை பாதிச்சிடுச்சு!.. ஓப்பன் டாக் கொடுத்த பத்திரிக்கையாளர்!.

actress ramba

Latest News

காசுக்கு ஆசைப்பட்டு ரம்பா கணவர் செய்த ஊழல்!.. இப்ப பல பிரபலங்களை பாதிச்சிடுச்சு!.. ஓப்பன் டாக் கொடுத்த பத்திரிக்கையாளர்!.

Social Media Bar

Actress Ramba : சமீபத்தில் இலங்கையில் நடந்த ஹரிஹரனின் இசை நிகழ்ச்சிதான் தற்சமயம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக இருந்து வருகிறது. இதற்கு முன்பு சென்னையில் ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

அந்த இசை நிகழ்ச்சிக்கு அதிகமான நபர்களுக்கு டிக்கெட் விற்றதன் காரணமாக இசை நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலருக்கும் இடம் கிடைக்காமல் போனது. இதனால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது பிறகு எதற்காக ஏ.ஆர் ரகுமானே தனது டிவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டிருந்தார்.

தற்சமயம் அதே மாதிரியான இன்னொரு பிரச்சனை இலங்கையில் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் நடந்துள்ளது. ஹரிஹரணின் இசை நிகழ்ச்சிக்கும் இதேபோல அதிகமான நபர்களுக்கு டிக்கெட் விற்று அதனால் பெரும் கூட்டம் இசை நிகழ்ச்சிக்கு வந்து இசை நிகழ்ச்சியில் பிரச்சனை ஆகியுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது நடிகை ரம்பாவின் கணவர் என்று கூறப்படுகிறது. முதலில் அவர் இந்த இசை நிகழ்ச்சி இலவசம் என்றுதான் அறிவித்தாராம். ஆனால் பல முக்கிய பிரபலங்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததன் காரணமாக அவருக்கு அதிக செலவாகிவிட்டது.

அந்த செலவை ஈடு கட்டுவதற்காக 40,000, 10,000, 5,000 என்ற தொகையில் டிக்கெட்டுகளை விற்க துவங்கினார். இதில் 40 ஆயிரம் டிக்கெட்டுகள் வாங்கும் நபர்கள் நடிகை தமன்னாவுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் இசை நிகழ்ச்சி துவங்கிய பிறகு எதுவுமே சரியாக நடக்கவில்லை அதிக கூட்டம் வந்ததால் அனைவரும் அவரவர் இஷ்டத்திற்கு வந்து நின்று இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துவங்கினர். மேலும் யாரும் தமன்னாவுடன் நின்று போட்டோவும் எடுத்துக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் அந்த நிகழ்ச்சியை ஒழுங்காக நடக்காமல் போனது. தற்சமயம் இது குறித்து பேசும் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு இது ரம்பாவின் கணவர் செய்த ஊழல் தான் என்று கூறியிருக்கிறார்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top