Tamil Cinema News
மூத்த நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் சாரா.. ஆடிப்போன தமிழ் ரசிகர்கள்..
தெய்வத்திருமகள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாரா.
சிறுவயதிலேயே இவருக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்தது தெய்வத்திருமகள் திரைப்படத்திலேயே மிகச் சிறப்பான நடிப்பை இவர் வெளிப்படுத்தி இருந்தார் இதனைத் தொடர்ந்து சைவம் என்கிற இன்னொரு திரைப்படத்திலும் இவர் நடித்தார்.
பிறகு படிப்பின் மீது கவனம் செலுத்திய சாரா தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். வெகு காலங்களுக்கு பிறகு இப்பொழுது அவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவரை பார்த்த பொழுதே கண்டிப்பாக இவர் கதாநாயகி ஆகிவிடுவார் என்கிற பேச்சு இருந்து வந்தது ஆனால் பலரும் எதிர்பார்க்காத ஒரு விஷயமாக இப்போது அவர் ஒரு பெரிய மூத்த நடிகருக்கு கதாநாயகியாக நடிக்கிறார்.
அது வேறு யாருமில்லை பாலிவுட் சினிமாவை சேர்ந்த ரன்வீர் சிங் தான்.
ரன்வீர் சிங்குக்கும் சாராவிற்கும் இடையே நிறைய வயது வித்தியாசம் உண்டு கதாநாயகியாக நடித்தாலும் கூட இளம் நடிகர்களுடன் தான் இவர் நடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் ரன் வீர் சிங்கோடு தற்சமயம் நடிப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
அதையும் தாண்டி இந்த திரைப்படத்தில் ரன்வீர் சிங்குக்கும் சாரா விற்கும் இடையே மிக நெருக்கமான காட்சிகள் நிறைய இருப்பதாகவும் கூறப்படுகிறது இது சர்ச்சை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
