News
ராஷ்மிகா அருவியில் டூ பீஸ் உடையில்.. அந்த மாதிரி போட்டோ வர காரணம் என்ன?. பின்னால் உள்ள சர்ச்சை!..
தெலுங்கு சினிமா மூலமாக தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் மூலமாக தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வர துவங்கின. தெலுங்கு சினிமாவில் அவருக்கு அதிகமாக வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. அதனை தொடர்ந்து தமிழில் சுல்தான் என்கிற திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார் ராஷ்மிகா.
சினிமாவில் வரவேற்பு:

பிறகு வாரிசு திரைப்படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் புஷ்பா படத்தில் நடித்ததன் மூலமாக இந்திய அளவில் அவருக்கு மார்க்கெட் கிடைத்தது.
இந்த நிலையில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அவரை குறித்து வரும் எதிர்மறை விமர்சனங்கள் குறித்து எப்போதும் கவலை தெரிவித்து வருகிறார் ராஷ்மிகா.
புகைப்பட சர்ச்சை:

சமீபத்தில் கூட வேறு பெண்ணின் புகைப்படத்தில் ராஷ்மிகாவின் முகத்தை மாற்றி வைத்து அதை பரவ விட்டிருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் ராஷ்மிகா டூ பீஸ் உடையில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது.
பார்க்கும்போது வெளிநாட்டு மாடல் அழகி ஒருவரின் புகைப்படம் என்பது பிறகுதான் தெரிந்துள்ளது, அதில் முகத்தை மட்டும் மாற்றி ராஷ்மிகாவின் போட்டோவாக மாற்றியுள்ளனர்.
