Tamil Cinema News
விஜய்யை விட எனக்கு விஜய் தேவரக்கொண்டா பெருசு.. பேட்டியில் ஓப்பனாக கூறிய ராஷ்மிகா..!
ராஷ்மிகா மந்தனா தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறது. அவர் நடித்து வெளியான கீதா கோவிந்தம் என்கிற திரைப்படம்தான் தென்னிந்தியாவில் அவரை அதிக பிரபலமாக்கியது.
அந்த திரைப்படத்தில் விஜய் தேவரக்கொண்டாதான் கதாநாயகனாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ராஷ்மிகாவுக்கு டியர் காம்ரேட் என்கிற திரைப்படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அந்த திரைப்படத்திலும் கூட விஜய் தேவரக்கொண்டாதான் கதாநாயகனாக நடித்தார்.
இதனால் இவர்கள் இருவருக்குமிடையே நல்ல நட்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் காதல் இருந்து வருவதாக பேச்சுக்கள் இருந்து வந்தன. அதற்கு தகுந்தாற் போல ராஷ்மிகாவும் விஜய் தேவரக்கொண்டாவுடன் நிறைய இடங்களுக்கு சென்று வந்தார்.
ராஷ்மிகா சொன்ன பதில்:
இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள போவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூட ராஷ்மிகா பேசியிருந்தார்.
இந்த நிலையில் இதற்கு முன்பு ஒரு பேட்டியில் ராஷ்மிகாவிடம் விஜய் மற்றும் விஜய் தேவரக்கொண்டா இருவரில் யாரை பிடிக்கும் என கேட்டிருந்தனர். அப்போது விஜய் தேவரகொண்டாவை விட்டுக்கொடுக்காமல் பேசியிருந்தார் ராஷ்மிகா.
