Connect with us

பாலிவுட்டில்தான் ரொமாண்டிக் பாட்டு வருது!.. சவுத் இந்தியாவில் ஐட்டம் சாங்தான் வருது!.. வாயை கொடுத்து வாய்ப்பை இழந்த ராஷ்மிகா!..

rashmika mandhanna

News

பாலிவுட்டில்தான் ரொமாண்டிக் பாட்டு வருது!.. சவுத் இந்தியாவில் ஐட்டம் சாங்தான் வருது!.. வாயை கொடுத்து வாய்ப்பை இழந்த ராஷ்மிகா!..

Social Media Bar

தமிழில் பொதுவாக ஒரு பழமொழி உண்டு இவனுக்கு வாயில் வாஸ்து சரி இல்லை என்று சில படங்களில் ஒரு பழமொழியை கேட்டிருப்போம். அப்படியாகத்தான் நடிகை ராஸ்மிகாவுக்கும் நடக்கிறது. எப்போதும் நடிகர் ராஸ்மிகா ஒரு சர்ச்சைக்கு உள்ளான நடிகையாகவே இருந்து வருகிறார்.

அவர் பதிவிடும் ஏதாவது ஒரு பதிவோ அல்லது ஏதாவது அவர் பேசும் பேச்சோ மக்கள் மத்தியில் பெரிய சர்ச்சையாகி விடுகிறது. அதன் பிறகு அந்த வன்மத்தை வெளிப்படுத்துவதற்காக மக்கள் தொடர்ந்து அவரது சமூக வலைதளங்களில் அவரை திட்டி வருகின்றனர்.

பிறகு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்மிகா ஒரு பதிவை போட வேண்டி இருக்கிறது. இந்த விஷயம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது இந்த நிலையில் தமிழில் வாரிசு திரைப்படத்திற்கு பிறகு ராஷ்மிகாவிற்கு கொஞ்சம் வாய்ப்புகள் வரத் தொடங்கின.

சில படங்களில் அவரை நடிக்க வைக்க தமிழ் இயக்குனர்களும் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் ஹிந்தியில் மிஷின் மஜ்னு என்கிற திரைப்படத்தில் நடித்தார் ராஸ்மிகா. அந்த படத்தின் விழாவிற்கு சென்ற ராஷ்மிகா சும்மா இல்லாமல் தென்னிந்தியாவை தாழ்த்தி பேசி உள்ளார்.

அங்கே பேசும் பொழுது சிறு வயதிலிருந்து நான் பாலிவுட் பாடல்களை கேட்டு இருக்கிறேன் பாலிவுட் பாடல்கள்தான் மிகவும் ரொமான்டிக்காக இருக்கும். தென்னிந்திய பாடல்களை பொறுத்தவரை அவை பெறும் மசாலா பாடல்களும், ஐட்டம் பாடல்களும் தான் இருக்கும் அதனால் எனக்கு பாலிவுட் பாடல்கள்தான் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

இவர் பேச்சை கேட்டு அதிர்ச்சியான நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா ராஸ்மிகாவிடம் இருந்து மைக்கை பிடிங்கினார்.  இந்த விஷயம் பெரும் பரபரப்பானதை அடுத்து பெரும் நடிகர்களுடன் இருந்த வாய்ப்பை எல்லாம் இழந்துவிட்டார் ராஸ்மிகா.

தற்சமயம் பாலிவுட்டில் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தாலும் கூட தென்னிந்தியாவில் அவருக்கு உண்டான வாய்ப்பு வெகுவாகவே குறைந்துவிட்டது. தமிழில் அவருக்கு வாய்ப்பு குறைந்தது கூட பெரிய விஷயம் இல்லை தெலுங்கிலும் கூட வாய்ப்பை இழந்துள்ளார் ராஸ்மிகா.

To Top