Bigg Boss Tamil
டாஸ்க்குன்னு டாஸ்க்குன்னு காலை உடைச்சி அனுப்பிட்டாங்க.. ரெண்டாம் நாளே ரவீந்தருக்கு நடந்த சம்பவம்..!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் துவங்கிய முதல் நாளில் இருந்து டாஸ்க்குகளும் கொடுக்கப்பட துவங்கி இருக்கின்றன. ஏனெனில் ஒவ்வொரு நாளும் புதுப்புது டாஸ்க்குகளை செய்யும் பொழுதுதான் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாக செல்லும் என்பதால் இந்த மாதிரியான டாஸ்க்குகள் கொடுக்கப்படுகின்றன.
ஆனால் இந்த முறை தொடர்ந்து இரண்டு நாட்களாக அதிக டாஸ்க் பிக்பாஸில் வழங்கப்பட்டு வருகின்றன. 18 பேரும் நிகழ்ச்சிக்குள் வந்திருப்பதால் மக்கள் மத்தியில் அது குறித்து நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும்.
அதை பூர்த்தி செய்யும் விதத்தில் போட்டிகள் நடத்தப்பட வேண்டி இருப்பதால் இவ்வாறு செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஓடிப் போய் நாற்காலிகளில் அமரும் விளையாட்டு ஒன்று டாஸ்க்காக கொடுக்கப்பட்டது.
ரவீந்தருக்கு நடந்த சம்பவம்:
இந்த விளையாட்டில் கலந்து கொள்வதில் ரவீந்திரக்கு அதிக பிரச்சனைகள் இருந்தது. அவருக்கு உடல் எடை அதிகம் என்பதால் ஓடுவது மாதிரியான விஷயங்களை செய்ய முடியாது. இந்த நிலையில் ஆரம்பத்திலேயே அவர் களப்படைந்து போனார்.
இருந்தாலும் கூட விதிமுறைகள் படி அவர் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பது அவர் வேறு வழியின்றி கலந்து கொண்டார். இதனால் அவரால் நிற்கவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பிறகு மருத்துவ உதவி பெற்ற ரவீந்தர் இப்பொழுது கழிவறைக்கு கூட நண்பர்கள் உதவியுடன் போகும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார்.
இந்த நிலையில் 100 நாளும் இவர் எப்படி தாக்குப்பிடிப்பார் என்பது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பி இருக்கின்றன. மேலும் ஒருத்தரின் உடல்நலம் கருதி பிக் பாஸ் அவர்களுக்கு டாஸ்க் வேலையை வழங்க வேண்டும் ஒரு வேலை ஒரு மாற்றுத்திறனாளி பிக் பாஸிற்குள் வந்தால் அவரையும் ஓடச் சொல்வார்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
