Connect with us

நீ யோசிக்கிறதுக்கு எல்லாம் நான் ஆளு கிடையாது.. என்கிட்ட உங்க பருப்பு வேகாது.. பவித்ராவுக்கு ரவீந்தர் கொடுத்த காட்டமான பதிலடி..!

Bigg Boss Tamil

நீ யோசிக்கிறதுக்கு எல்லாம் நான் ஆளு கிடையாது.. என்கிட்ட உங்க பருப்பு வேகாது.. பவித்ராவுக்கு ரவீந்தர் கொடுத்த காட்டமான பதிலடி..!

Social Media Bar

கடந்த இரு நாட்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சி அதிக வரவேற்புடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது .தற்சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக ரவீந்திர் மாறி இருக்கிறார்.

தொடர்ந்து மக்களுக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து அதற்கு ஏற்றார் போல அவரது விளையாட்டை விளையாடி வருகிறார். மேலும் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் மிக நிதானமாக அவர் பேசுவதை பார்க்க முடிகிறது.

ரவீந்தர் காட்டமான பதில்:

இப்பொழுது ரவிந்தர் ஜெய்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த எண்ணத்தை போக்கும் வகையில் தற்சமயம் அவர் கோபப்பட்டு பேசியிருப்பது அதிக வைரலாக துவங்கியிருக்கிறது.

ரவீந்திரருக்கும் பவித்ராவுக்கும் இடையே தற்சமயம் சண்டை ஏற்பட்டு இருக்கிறது. கடுமையான வார்த்தைகளை பேசவில்லை என்றாலும் மறைமுகமாக அவரை திட்டியிருக்கிறார் ரவீந்தர். நான் என்ன சொன்னாலும் அதில் தவறு கண்டுபிடிப்பீர்கள் என்று கூறி ரவீந்திரிடம் முதலில் சண்டையை ஆரம்பித்தது பவித்ரா தான்.

அதற்கு பதில் அளித்த ரவீந்தர் உங்கள் யூகத்திற்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. நான் எல்லா விஷயங்களுக்கும் தவறு கண்டுபிடிக்கும் ஆள் கிடையாது என்று வெளிப்படையாக திட்டி இருக்கிறார். இந்த நிலையில் ரவீந்திரமே கூட போகப் போக அடுத்த கட்டங்களில் சண்டை போடுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்கின்றனர் ரசிகர்கள்.

To Top