Connect with us

மூன்று மடங்கு காசு தரேன்.. வாய்ப்பு இல்லாததால் விஜய் பட நடிகை எடுத்த முடிவு..!

Tamil Cinema News

மூன்று மடங்கு காசு தரேன்.. வாய்ப்பு இல்லாததால் விஜய் பட நடிகை எடுத்த முடிவு..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தாலும் கூட சில நடிகைகள் மிக பிரபலமாக இருப்பதுண்டு. அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைகளை பொறுத்தே அவர்களுக்கான வரவேற்பு என்பதும் அதிகரிக்கிறது.

சில நடிகைகள் நிறைய திரைப்படங்களில் நடித்தாலும் கூட அவர்கள் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில்லை. அதனாலேயே அவர்களுக்கான அடையாளம் என்பது சினிமாவில் கிடைப்பதில்லை.

அந்த வகையில் நடிகை ரெபா மோனிகா தமிழ் சினிமாவில் முக்கியமானவர். இவர் 2016 முதலே சினிமாவில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் மலையாளத்தில்தான் இவர் நடித்து வந்தார்.

அதற்கு பிறகு தமிழில் ஜரிகண்டி என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனாலும் கூட தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாகும் அளவிற்கு கதாபாத்திரம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில்தான் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதற்கு பிறகு மீண்டும் இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் என்பது இல்லாமல் போனது.

இந்த நிலையில் தெலுங்கில் ஒரு ஐட்டம் பாடலில் ஆடுவதற்கு இவர் ஒப்புக்கொண்டார். ஏனெனில் சமந்தா மாதிரியான சில நடிகைகளுக்கு இந்த மாதிரி ஐட்டம் பாடல்களில் ஆடியதால் வரவேற்பு கிடைத்துள்ளன. எனவே அந்த பாடலில் மிகவும் கவர்ச்சியாக இவர் நடனமாடியுள்ளார்.

இந்த பாடலில் நடனமாட மட்டும் கதாநாயகியாக நடிப்பதை விடவும் 3 மடங்கு அதிக சம்பளம் வாங்கியுள்ளாராம் நடிகை ரெபா மோனிகா. இந்த நிலையில் அவருக்கு கூலி திரைப்படத்தில் வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

To Top