Connect with us

சரக்கு… ஆட்டம் பாட்டம்!.. வரவேற்பையே மாற்றி அமைத்த அர்ஜுன் மகளும், தம்பி ராமையா மகனும்!..

aishwarya reception

News

சரக்கு… ஆட்டம் பாட்டம்!.. வரவேற்பையே மாற்றி அமைத்த அர்ஜுன் மகளும், தம்பி ராமையா மகனும்!..

Social Media Bar

சமீபத்தில் பிரபலங்களுக்கு நடந்த திருமணங்களில் தம்பி ராமையா மகனுக்கும், அர்ஜுன் மகளுக்கும் இடையே நடந்த திருமணம் பெரிதாக பேசப்பட்டது. அதேபோல நடிகர் பிரேம்ஜிக்கு நடந்த திருமணம் பெரிதாக பேசப்பட்டது.

பொதுவாகவே இப்பொழுது திருமணம் செய்யும் பிரபலங்கள் எல்லாம் மிகவும் எளிமையாக திருமணங்களை செய்ய தொடங்கியிருக்கின்றனர். நடிகர் பிரேம்ஜியும் மிகவும் எளிமையாகதான் அவரது திருமணத்தை செய்திருந்தார்.

எளிமையான திருமணம்:

அதேபோல நடிகர் அர்ஜுனும் திருமணத்தை எளிமையாகதான் நடத்தி இருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து வரவேற்பையாவது பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்ற திட்டமிட்டு இருந்தார் அர்ஜுன்.

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவிற்கும் கடந்த ஜூன் 10 ஆம் தேதி  அர்ஜுன் கட்டியிருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடந்தது. கடந்த ஜூன் 14ஆம் தேதி இவர்களின் வரவேற்பு நடந்தது.

மது அருந்திய பிரபலங்கள்:

வரவேற்பில் அனைவருக்கும் மது வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது பொதுவாக வரவேற்புகளில் மது வழங்க மாட்டார்கள். ஆனால் இது பிரபலங்கள் கூடும் வரவேற்பு ஆகும். அதிகபட்சம் சினிமா பிரபலங்கள் அனைவரும் இந்த வரவேற்பில் கலந்து கொண்டனர்.

அவர்கள் எங்கு சென்றாலும் முக்கிய வழக்கமாக மது அருந்துவதை கொண்டிருப்பதால் வரவேற்பில் மது வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாட்டிலை ஓபன் செய்து கேளிக்கையை துவங்கிய உமாபதி தொடர்ந்து ஐஸ்வர்யாவுடன் நடனமாடி அசத்தியிருக்கிறார்.

இந்த நிலையில் உமாபதி மற்றும் ஐஸ்வர்யா ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கிறது என்று ஒரு பக்கம் அவர்களை பலர் வாழ்த்தி வந்தாலும் கூட இன்னொரு பக்கம் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் வகையில் இப்படி வரவேற்பில் மது வழங்குவது சரியா என்று கேட்டு மக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர் 

To Top