இன்னும் எனக்கே படத்தின் கதை முழுசா தெரியல.. ஷாக் கொடுத்த காந்தாரா இயக்குனர்.!
காந்தாரா முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து வெளியான காந்தாரா 2 திரைப்படத்தை எடுத்து மீண்டும் அதிக பிரபலம் அடைந்து இருக்கிறார் இயக்குனர் ரிஷப் ஷெட்டி.
எதிர்பார்த்ததை போலவே காந்தாரா முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் அதிக பிரபலம் அடைந்து இருக்கிறது. முதல் பாகத்தை விடவும் இந்த படம் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் படம் குறித்து அவர் கூறிய சில விஷயங்கள் ஆச்சரியத்தை அளிக்கும் விதமாக இருக்கின்றன. காந்தாரா படத்தை பொறுத்தவரை ஒரு கிணறுதான் படத்தின் அம்சமாக இருக்கிறது. அந்த கிணற்றுக்குள் அடங்கி இருக்கும் மர்மங்கள் என்னவென்பது யாராலும் அறியப்படாத ஒரு விஷயமாக இருக்கிறது.

ரிஷப் ஷெட்டி சொன்ன விஷயம்:
இது குறித்து ரிஷப் ஷெட்டி கூறும்பொழுதே இன்னமும் அந்த கிணற்றுக்குள் என்னவெல்லாம் மர்மம் இருக்கிறது என்பது எனக்கே தெரியாத ஒன்று என்று அவர் கூறியிருக்கிறார்.
இதன் மூலம் தெரிவது என்னவென்றால் காந்தாரா இரண்டாம் பாகத்தில் அந்த கிணற்றுக்குள் கடவுள் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. ஆனால் அதனைத் தாண்டி இன்னும் பல விஷயங்கள் பல மர்மங்கள் அந்த கிணற்றுக்குள் இருப்பதாக கதையை மாற்றி அமைப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது அதைத்தான் ரிஷப் செட்டி இப்படி கூறுகிறார் என்பது ரசிகர்கள் கருத்தாக இருக்கிறது.