சௌந்தர்யாவை பத்தி பேச எனக்கு விருப்பம் இல்ல.. ஆர்.ஜே ஆனந்தி அப்படி சொல்ல இதுதான் காரணம்?.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெகுவாக விளையாடவில்லை என்று முதல் இரண்டு வாரங்கள் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானவர் நடிகை சௌந்தர்யா.

நடிகை சௌந்தர்யா உள்ளே சென்ற பொழுது இரண்டு வாரங்களுக்கு எதுவுமே செய்யாமல் இருந்தார். ஆனால் விஜய் சேதுபதி அதை ஒரு முறை சுட்டிக்காட்டிய பிறகு தொடர்ந்து அவரது ஆட்டம் என்பது தனியாக இருந்தது.

அவரது ஆட்டத்தை தொடர்ந்து மக்கள் விமர்சனம் செய்து வந்தாலும் கூட எதுவுமே செய்யாமல் இருப்பதற்கு சௌந்தர்யா தொடர்ந்து ப்ளே செய்து வந்தது அவருக்கு அதிக வரவேற்பை உண்டாக்கி தந்தது.

ஆர்.ஜே ஆனந்தி சொன்ன விஷயம்:

Social Media Bar

இந்த நிலையில் அதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் ஆர்.ஜே ஆனந்தி தற்சமயம் எலிமினேஷன் ஆகி வெளியே வந்திருக்கிறார். வெளியே வந்த ஆர்.ஜே ஆனந்தியிடம் சௌந்தர்யாவை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த ஆர்.ஜே ஆனந்தி கூறும் பொழுது நான் சௌந்தர்யா பற்றி பேச விரும்பவில்லை. ஏனெனில் அந்த வீட்டுக்குள் இருந்தவரை சௌந்தர்யா எனக்கு ஒரு சகப் போட்டியாளர். அதனால் அவருக்கும் எனக்கும் நிறைய பிரச்சனைகள் இருந்திருக்கலாம்.

அதை வெளியில் வந்து பேசுவது சரி கிடையாது வெளி உலகத்தில் அவர் எனக்கு ஒரு போட்டியாளரே கிடையாது என்று கூறியிருக்கிறார் ஆர்.ஜே ஆனந்தி.