News
ஒரு சாமானியன் சினிமாவிற்குள் போகும்போது எப்படி இருக்கும்..! ஆடிப்போன ஆர்.ஜே பாலாஜி..
கனவுகளுடன் சினிமாவில் காலடி வைக்கும் பெரும்பாலான இளைஞர்களுக்கு அவ்வளவு எளிதாக சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை. அப்படி சினிமாவிற்குள் சென்று சாதித்த ஒரு சில இளைஞர்களில் ஆர்.ஜே பாலாஜி முக்கியமானவர்.
ரேடியோவில் ஆர்.ஜேவாக இருந்து வந்த ஆர்.ஜே பாலாஜி டாக் பேக் என்கிற நிகழ்ச்சியின் மூலமாக மிகவும் பிரபலமானார். அதுவே அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வழியை ஏற்படுத்தி கொடுத்தது. ஒரு சாமானியன் சினிமாவிற்குள் வரும்போது அது அவனுக்கு எப்படி இருக்கும் என விளக்குகிறார் ஆர்.ஜே பாலாஜி.

அவர் கூறும்போது “ஆர்.ஜேவாக பணிப்புரிந்தப்போது எனக்கு மாத சம்பளம் 30,000 ரூபாய் கிடைத்து வந்தது. இந்த நிலையில்தான் தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றேன். அதில் மொத்தமே எனக்கு 15 நாட்கள்தான் படப்பிடிப்பு இருந்தது. ஆனால் சம்பளமாக 6 லட்ச ரூபாய் கொடுத்தார்கள்.
என்னுடைய இரண்டு வருட சம்பளத்தை 15 நாட்களுக்கு சம்பளமாக கொடுத்தார்கள். மேலும் வேளா வேளைக்கு ஜூஸ் கொடுத்தார்கள். அப்போதுதான் எனக்கு தெரிந்தது. சினிமா எப்படிப்பட்ட விஷயம் என்பது என விளக்கியுள்ளார்.
ஒவ்வொரு இளைஞனும் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைக்க நினைப்பதற்கு இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
