Connect with us

ஆர்.ஜே பாலாஜியின் திரைப்படத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா!.. இதுதான் காரணமாம்!..

rj balaji anushka

News

ஆர்.ஜே பாலாஜியின் திரைப்படத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா!.. இதுதான் காரணமாம்!..

Social Media Bar

பொதுவாக சந்தானம், சிவகார்த்திகேயன் மாதிரியான நடிகர்கள் தங்களது முகத்தை திரையில் காட்டிதான் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளனர். ஆனால் தன்னுடைய குரலை வைத்து மட்டுமே மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர்தான் நடிகர் ஆர்.ஜே பாலாஜி.

பிரபலங்களை கலாய்த்து இவர் நடத்திய நிகழ்ச்சி ஒன்று அதிக பிரபலமானது. இதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜியும் மிக பிரபலமானார். ஆர்.ஜே பாலாஜி காமெடியனாகவே நிறைய படங்களில் நடித்த பிறகு கதாநாயகனாக அறிமுகமாக திட்டமிட்டார்.

ஒரு காமெடியன் கதாநாயகனாக நடிக்க துவங்கினால் அதை மக்கள் எந்த அளவிற்கு ஏற்று கொள்வார்கள் என்பது அவருக்கு குழப்பமான விஷயமாகவே இருந்தது. எனவே கொஞ்சம் பிரபலமான கதாநாயகியை முதல் படத்தில் நடிக்க வைப்பதன் மூலம் அதை ஈடுக்கட்ட முடியும் என நினைத்தார்.

இதனால் கதாநாயகிக்கு படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை வைத்திருந்தார் ஆர்.ஜே பாலாஜி. இதனை தொடர்ந்து எல்.கே.ஜி திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகை அனுஷ்காவிடம் கேட்டுள்ளார் ஆர்.ஜே பாலாஜி.

ஆனால் அவர் எட்டு மாதங்கள் கழித்துதான் கால்ஷூட் கொடுக்க முடியும். இப்ப ரொம்ப பிஸி என கூறிவிட்டார். அதனை தொடர்ந்து அடுத்து ஆர்.ஜே பாலாஜி தேர்ந்தெடுத்த நடிகைதான் ப்ரியா ஆனந்த். ஒரு வேளை அனுஷ்கா நடித்திருந்தால் அந்த படம் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும் என்றாலும் அந்த சமயத்தில் ஆர்.ஜே பாலாஜிக்கு அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

To Top