Cinema History
பேட்டி எடுக்க வந்தா கீழ உக்கார வக்கிறியா!.. திரைப்படம் மூலமாகவே வன்மம் தீர்த்த ஆர்.ஜே பாலாஜி!.. எந்த சாமியார் தெரியுமா?
RJ Balaji : ரேடியோக்களில் ஆர்.ஜே வாக பணிபுரிந்து அதன் பிறகு தமிழ் சினிமாவிற்கு காமெடியனாக நடிக்க வந்தவர் ஆர்.ஜே பாலாஜி. ஆர்.ஜே பாலாஜி ரேடியோவில் பணிபுரிந்த பொழுதே அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது.
அவரது பேச்சுதான் அவரை வாழவைத்துக் கொண்டிருக்கும் விஷயம் என்று கூறலாம். ரேடியோ துறையில் இருக்கும் பொழுது டாக் பேக் என்னும் நிகழ்ச்சி மூலமாக பிரபலங்களுக்கு போன் செய்து அவர்களை கிண்டல் செய்யும் ஒரு நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.
அந்த நிகழ்ச்சி அதிக வரவேற்பை பெற்றதை அடுத்து ஆர்.ஜே பாலாஜியும் பிரபலமாக துவங்கினார். அதன் பிறகு அவர் நிறைய படங்களில் நகைச்சுவை நடிகராக நடிக்க தொடங்கினார். பிறகு நகைச்சுவை நடிகனாக நடிப்பதை விடவும் நகைச்சுவை கதாநாயகனாக நடிப்பது நன்றாக இருக்கும் என்று நினைத்தார்.
அப்படி அவர் நடித்த திரைப்படங்களான எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன. அதனை தொடர்ந்து நிறைய படங்கள் நடித்து வருகிறார் ஆர்.ஜே பாலாஜி.

தற்சமயம் அவர் நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் கூட வெளியாகி நல்ல வெற்றியை கண்டு வருகிறது. இந்நிலையில் இடையில் ஒரு பேட்டியில் பேசிய அவர் ஒரு பெரும் சாமியாரை பேட்டி எடுப்பதற்காக எல்லா ஆர்.ஜேவும் சென்றிருந்தோம் அப்பொழுது எங்கள் அனைவரையும் கீழே அமர வைத்து அவர் மட்டும் நாற்காலியில் அமர்ந்து எங்களுக்கு ஆசிர்வாதம் வழங்கிக் கொண்டிருந்தார். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை எனவே நான் அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன் என்று கூறியிருந்தார் ஆர்.ஜே பாலாஜி.
இது குறித்து பொதுமக்கள் கூறும் பொழுது ஜக்கி வாசுதேவ் தான் அந்த சாமியாராக இருக்க வேண்டும் என்கின்றனர். இது பெரும்பாலானவர்களின் கருத்துக்களாக இருக்கின்றன. மேலும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி ஒரு சாமியாரை காட்டி இருப்பார் அவரும் கிட்டத்தட்ட ஜாக்கி வாசுதேவோடு ஒத்து போகும் சாமியராகதான் இருப்பார். எனவே அந்த சாமியார் ஜக்கி வாசுதேவாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பேச்சுக்கள் இருக்கின்றன.
