Tamil Cinema News
உழைச்ச உழைப்புக்கு ஏத்த பலன் கிடைக்கல.. மூக்குத்தி அம்மன் 2 குறித்து ஆர்.ஜே பாலாஜி.!
ரேடியோவில் தொகுப்பாளராக இருந்து பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து காமெடி நடிகராக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கினார் ஆர்.ஜே பாலாஜி.
அவர் நடித்த முதல் திரைப்படமான எல்.கே.ஜி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆர்.ஜே பாலாஜி அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் ஆர்.ஜெ பாலாஜி.
உழைச்ச உழைப்புக்கு ஏத்த பலன் கிடைக்கல
பெரும்பாலும் ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. பிறகு ஆர்.ஜே பாலாஜி ஒரு இயக்குனராக திரைப்படங்களை இயக்கவும் தொடங்கினார். அவர் தமிழில் இயக்கிய இரண்டு திரைப்படங்களுமே எதிர்பார்க்காத அளவிலான வெற்றியை தமிழில் பெற்றுக் கொடுத்திருக்கின்றன.
மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்ல விசேஷம் ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி. இந்த நிலையில் அடுத்து சூர்யாவின் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கிய பொழுது அந்த திரைப்படத்தில் நயன்தாராதான் அம்மனாக நடித்தார்.
இந்த திரைப்படத்தை ஆர்.ஜே பாலாஜி தனது சொந்த தயாரிப்பில் தயாரிக்க முடிவு செய்தார். இந்த படத்திற்கு மாசாணி என்று பெயர் வைப்பதாகவும் இருந்தது. இந்த நிலையில் இந்த படத்திற்கு எதிராக நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கான திட்டத்தை தீட்டினார்.
மூக்குத்தி அம்மன் 2 குறித்து ஆர்.ஜே பாலாஜி
அந்த வகையில் வேக வேகமாக மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து இந்த திரைப்படத்தை சுந்தர் சி இயக்க இருப்பதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன. இது குறித்து சமீபத்தில் ஆர்.ஜே பாலாஜியிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஆர்.ஜே பாலாஜி கூறும் பொழுது மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை பொருத்தவரை சுந்தர் சி சார் இயக்குவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சொல்லப்போனால் என்னை தமிழில் முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தது சுந்தர் சிதான்.
அதேபோல சுந்தர் சி தயாரிப்பிலும் நான் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். எனவே சுந்தர்.சி சாருக்கு நான் இதற்காக போன் செய்து வாழ்த்துக்களை கூறினேன். மேலும் சூர்யா படத்தை இயக்கி வருவதால் என்னால் இப்பொழுது மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை இயக்க முடியாது என்கிற நிலை இருக்கிறது என்று கூறியிருந்தார்.
ஆனால் இறுதியாக ஆர்.ஜே பாலாஜி கூறும் பொழுது சில படங்களுக்கு எவ்வளவு கடுமையாக வேலை பார்த்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று கூறியிருந்தார் அவர் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தைதான் கூறுகிறார் என்று இது குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
