Tamil Cinema News
தப்பா பேசுன ஒரு வார்த்தை.. மதியம் வரை வேதனை அனுபவிச்சேன்.. துயரத்துக்கு உள்ளான நடிகர் ஆர்.ஜே பாலாஜி.!
தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியை பெற்று மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று நடிகரான நடிகர்கள் பலர் உண்டு. அப்படியான நடிகர்களில் ஆர்.ஜே பாலாஜியும் ஒருவர்.
ரேடியோவில் ஆர்.ஜேவாக பணியாற்றி வந்த ஆர்.ஜே பாலாஜிக்கு கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. ரேடியோவில் இவர் பேசிய டாக் பேக் எனும் நிகழ்ச்சி அதிக பிரபலம் அடைந்ததை அடுத்து சினிமா துறையில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து காமெடியனாக நடித்து வந்த ஆர்.ஜே பாலாஜி அதற்குப் பிறகு கதாநாயகனாக நடிக்க துவங்கினார். இந்த நிலையில் ஆரம்பகால கட்டங்களில் அவர் செய்த ஒரு விஷயத்தால் அவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் போது எவ்வளவு பிரச்சனை வந்தது என்று அவர் பேசியிருந்தார்.
ஆர்.ஜே பாலாஜிக்கு நடந்த நிகழ்வு:
அதில் அவர் கூறும் பொழுது ஒரு முறை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்னை சந்தித்த பொழுது பிருந்தா மாஸ்டருக்கு போன் செய்து டாக் பேக் செய்ய சொன்னார்கள். நானும் அதேபோல செய்தேன் செய்துவிட்டு பிறகு நான் ஆர் ஜே பாலாஜி பேசுகிறேன் என்று உண்மையை கூறினேன்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறினார் என்பதால் அதை சகஜமாக எடுத்துக் கொண்டார் பிருந்தா மாஸ்டர். அதற்கு பிறகு சுந்தர் சி திரைப்படத்தில் நான் நடித்த பொழுது பிருந்தா மாஸ்டர் எனக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்க வந்தார்.
அன்று நான் அவரை வம்பிழுத்ததை அவர் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு அன்றைய தினம் என்னை படுத்தி எடுத்து விட்டார் காலையில் ஒரே ஒரு ஸ்டெப்பை எனக்கு சொல்லித் தருகிறேன் என்று கூறி மதியம் வரை பயிற்சி என ஆட வைத்து விட்டார்.
அதற்கு பிறகு மதியத்திற்கு மேல் ஷூட்டிங்கில் அதை ஆட வரும் பொழுது அந்த ஸ்டெப் ஆட வேண்டாம் என்று கூறி நடனத்தை மாற்றி விட்டார் என்று அந்த அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி.
