Connect with us

தலையில் ரத்தம் வழிஞ்சும் ரஜினிகாக அதை செஞ்சேன்.. இதெல்லாம் ஒரு பெருமையா..! வாயை விட்டு சிக்கிய ஆர்.கே சுரேஷ்.!

Tamil Cinema News

தலையில் ரத்தம் வழிஞ்சும் ரஜினிகாக அதை செஞ்சேன்.. இதெல்லாம் ஒரு பெருமையா..! வாயை விட்டு சிக்கிய ஆர்.கே சுரேஷ்.!

Social Media Bar

பெரிய நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குபவர்களாக தொடர்ந்து இருந்து வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் ரசிகர்கள். ஒரு நடிகருக்கு எந்த அளவிற்கு பெரிய ரசிக பட்டாளம் இருக்கிறதோ அதே அளவிற்கு வசூலும் இருக்கும். அதனால் தானாகவே அந்த நடிகருக்கு சம்பளம் அதிகரித்துவிடுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கூட அந்த காரணத்தால்தான் சம்பளம் அதிகரித்துள்ளது. அதே சமயம் ரசிகர்கள் தங்களது இளமை காலங்களில் வேலை போன்ற விஷயங்களில் செட்டில் ஆகாமல் தொடர்ந்து தன்னுடைய நடிகருக்காக சுற்றி கொண்டிருப்பதும் கூட அதிருப்தி ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது.

இதனால்தான் நடிகர் அஜித் தனக்கு ரசிகர் மன்றமே வைக்க கூடாது என்று விதிமுறை போட்டார். ஒவ்வொரு தடவையும் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் செய்யும் ஆபத்தான விஷயங்களும் அதனால் நடக்கும் உயிரிழப்புகளையும் பார்க்க முடிகிறது.

சமூகம் சார்ந்தே இதற்கு எதிர்ப்பு இருந்து வரும் நிலையில் அதை ஒரு பெருமையாக பேசியிருக்கிறார் நடிகர் ஆர்.கே சுரேஷ். ஒரு பேட்டியில் அவர் கூறும்போது ரஜினி நடித்த அண்ணாமலை படத்திற்கு முதல் நாள் முதல் ஷோ சென்றிருந்தேன்.

அப்போது முழு தேங்காயை எனது தலையில் வைத்து உடைத்தனர். எனது தலை உடைந்து ரத்தம் வர துவங்கிவிட்டது. ஆனால் படத்தை முழுதாக பார்க்க வேண்டும் என மருத்துவமனை செல்லாமல் படத்திற்கு சென்றேன். படம் முடியும் வரையில் தலையில் இரத்தம் வழிந்துக்கொண்டே இருந்தது. ஆனாலும் நான் படத்தைதான் பார்த்தேன்.

அந்த அளவிற்கு தலைவரின் ரசிகனாக இருந்துள்ளேன் என கூறியுள்ளார் ஆர்.கே சுரேஷ். இதற்கு இதெல்லாம் பெருமையாக கூற கூடிய விஷயமா என கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

To Top