Connect with us

டி.டி.எஃப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து!.. அப்போ மஞ்சள் வீரன் கதி என்ன?

ttf vasan

News

டி.டி.எஃப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து!.. அப்போ மஞ்சள் வீரன் கதி என்ன?

Social Media Bar

டூ கே கிட்ஸ்களால் சின்ன அஜித், சின்ன தல என்று பல பெயர்களில் அழைக்கப்படுபவர் டிடிஎஃப் வாசன். ஒரு சின்ன யூடியூப் சேனல் துவங்கி அதில் தனது பைக் சாகசங்களை வெளியிட்டு அதன் மூலமாக பிரபலமான டிடிஎஃப் வாசன் பைக் பிரியர்கள் அனைவருக்கும் தற்சமயம் கதாநாயகனாக இருந்து வருகிறார்.

டி.டி.எப் வாசன் போக்குவரத்து விதிமுறைகளுக்கு விரோதமாக பலமுறை பைக் ஓட்டிய காரணத்தினால் அவருக்கு பலமுறை அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் அவர் திரும்பத் திரும்ப மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பைக் சாகசங்களை செய்து கொண்டே இருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சாகசத்தை நிகழ்த்தும் பொழுது இவருக்கு விபத்து ஏற்பட்டது. அவர் அந்த சாகசத்தை பொதுமக்கள் செல்லும் சாலையில் செய்தார். இதனால்  அவரை கைது செய்து அவருக்கு தண்டனை விதித்தது நீதிமன்றம்.

இந்த நிலையில் தற்சமயம் காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் 10 ஆண்டுகளுக்கு டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்துள்ளார் 6.10.2023 முதல் 5.10.2033 வரை டிடிஎஃப் வாசனால் உரிமம் வைத்து வண்டி ஓட்ட முடியாது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் நடிக்கும் மஞ்சள் வீரன் திரைப்படத்தில் எப்படியும் படம் முழுக்க டி.டி.எஃப் வாசனுக்கு பைக் சாகசங்கள் இருக்கும். அப்படி இருக்கையில் அவர் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் எப்படி அவற்றை செய்வார், அது தவறு இல்லையா என்று ஒரு பக்கம் கேள்வி எழுந்து வருகிறது.

ஆனால் பாதுகாப்பான முறையில் மக்கள் நடமாடாத பகுதியில் இந்த மாதிரி படப்பிடிப்புகளை நிகழ்த்தும்போது இதில் பிரச்சனை எதுவும் இருக்காது என்று ஒரு பக்கம் பேச்சு இருக்கின்றது.

Articles

parle g
madampatty rangaraj
To Top