Latest News
லிப் கிஸ் எங்களுக்கு சாதாரண விஷயம்.. சர்ச்சைக்கு பதில் கொடுத்த ரோபோஷங்கர் மகள்!..
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ரோபோ சங்கர். அதற்கு பிறகு அவருக்கு திரைத்துறையில் வாய்ப்பை பெற்று அதிலும் பிரபலமாகி வந்தார். அவரது மகள் இந்திரஜாவும் பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கும் கார்த்திக் எனபவருக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை வட இந்திய முறையில் நடத்தினார் ரோபோ சங்கர். அப்போதிலிருந்தே அவரது திருமணம் குறித்த சர்ச்சைகள் இணையத்தில் வலம் வந்தன.
தமிழ் பாரம்பரியத்தில் திருமணம் செய்யாமல் இப்படி வடக்கு ஸ்டைலில் திருமணம் செய்கின்றனரே என்றெல்லாம் அவர்களை விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் திருமண விழாவில் கார்த்திக் ரோபோ சங்கரின் மனைவி ப்ரியங்காவிற்கு உதட்டில் முத்தம் கொடுத்த வீடியோ மிகவும் ட்ரெண்ட் ஆகி வந்தது.
பலரும் இதெல்லாம் உறவு முறைகளுக்குள் அசிங்கமில்லையா. என்று இதுக்குறித்து விமர்சனம் தெரிவித்து வந்தனர். இதற்கு முன்பே இதுப்போல இன்னொரு பிரச்சனையும் நடந்திருந்தது. முந்தைய விழாவில் இந்திரஜா ரோபோ சங்கருக்கு இதே போல உதட்டில் முத்தமிட்டிருந்தார். அப்போதே அது அதிக சர்ச்சையாகி இருந்தது.
அதற்கு அப்போது பதிலளித்த இந்திரஜா எனது தந்தைக்கு சிறு வயது முதலே நான் அப்படிதான் முத்தம் கொடுத்து வருகிறேன். எங்களுக்கு அதில் எந்த தவறும் தெரியவில்லை. பார்க்கும் உங்களுக்குதான் அது தவறாக தெரிகிறது. என் தந்தை என்னை நல்ல முறையில்தான் வளர்த்திருக்கிறார் என பதிலளித்திருந்தார்.
இந்த நிலையில் அந்த வீடியோவை எடுத்து தற்போதைய சர்ச்சைக்கு பதிலடியாக பகிர்ந்து வருகின்றனர் ரோபோ சங்கர் ரசிகர்கள்!.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்