வருகிற பொங்கலை முன்னிட்டு வாரிசு, துணிவு என்ற இரு பெரும் திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. ரசிகர்கள் இந்த படங்களுக்காக வெகுவாக காத்திருக்கின்றனர்.

வெகு நாட்களுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் நடித்து இந்த இரு படங்களும் போட்டி போட்டுக்கொண்டு வெளியாகின்றன என்பதால் மக்கள் மத்தியில் படம் குறித்து அதிக வரவேற்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் இதை வைத்து ஒரு போட்டி ஒன்றை அறிவித்துள்ளது ரோகிணி திரையரங்கம். அதாவது இந்த வருடம் பல தமிழ் படங்கள் வந்துள்ளன. அதில் சிறந்த 10 தமிழ் படங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அவற்றை ஒன்று முதல் 10 வரை சரியாக வரிசைப்படுத்தி கூற வேண்டும்.
அப்படி கூறுபவர்களுக்கு வாரிசு அல்லது துணிவு படத்தின் டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த போட்டியை தனது டிவிட்டர் பக்கத்தில் ரோகிணி சினிமா அறிவித்துள்ளது.
ரசிகர்கள் பலரும் அதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.