Actress
வெள்ளை மயில் போல! – கீர்த்தி சுரேஷ் க்யூட் லுக்!
சிறு வயது முதலே திரையில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால் 2015 இல் வந்த இது என்ன மாயம் திரைப்படம்தான் இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

இவர் தமிழில் முதன் முதலாக கதாநாயகியாக நடித்த படம் இது என்ன மாயம். ஆனால் இந்த திரைப்படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை என்பதால் கீர்த்தி சுரேஷ் பெரிதாக பிரபலமாகவில்லை.

அதற்கு சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படம் இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

அதை தொடர்ந்து தொடரி, ரெமோ, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்தார். இவரது நடிப்பிற்கு சவாலாக அமைந்த திரைப்படம் நடிகையர் திலகம். நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை மகாநதி என்னும் படமாக்கினர். அந்த படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்தது மூலம் இன்னும் புகழ் பெற்றார் கீர்த்தி சுரேஷ்.

தற்சமயம் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
