பரவி வரும் விஜய் கீர்த்தி சுரேஷ் வதந்தி! – சமூக வலைத்தளங்களில் இப்ப இதுதான் ட்ரெண்ட்!

தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகராக இருப்பவர் விஜய். தொடர்ந்து பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். அடுத்து அரசியலிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Social Media Bar

தற்சமயம் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன. இந்த நிலையில் விஜய் குறித்து அவதூறு செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் விஜய் கீர்த்தி சுரேஷை காதலிப்பதாகவும், எனவே சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டு கீர்த்தி சுரேஷை திருமணம் செய்துக்கொள்ள போவதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது.

கீர்த்தி சுரேஷ் இதுவரை நடிகர் விஜய்யுடன் இரண்டு படங்களில் நடித்துள்ளார். பைரவா மற்றும் சர்கார் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர்கள் காதல் கொண்டது போல எந்த ஒரு செய்தியும் இதுவரை கிடைக்கவில்லை.

அதே போல விஜய் சிறிது காலமாக தனது தாய், தந்தை, மனைவி அனைவரையும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே இதுவும் கூட இந்த வதந்தி பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்.

ஆனால் இந்த வதந்தி தீயென பரவியதில் சமூக வலைத்தளங்களில் தற்சமயம் இந்த விஷயம்தான் பேசு பொருளாக உள்ளது.