Tamil Cinema News
சிம்புவுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி அந்த மாதிரி காட்சிகள் வைப்பதில் பிரச்சனை.!
தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக நடிகை சாய் பல்லவி இருந்து வருகிறார். பெரும்பாலும் சாய் பல்லவி நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு கூடி வருகிறது. அமரன் திரைப்படத்திற்கு பிறகு தற்சமயம் தமிழில் மிக முக்கியமான நடிகையாக மாறியுள்ளார் சாய் பல்லவி.
ஆரம்பம் முதலே அவரின் நடனம் காரணமாக சாய் பல்லவி பிரபலமானவராகவே இருந்து வருகிறார். இந்த நிலையில் அமரன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்த தண்டேல் என்கிற திரைப்படத்தில் சாய் பல்லவி நடித்திருந்தார்.
சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் அடுத்தும் வரிசையாக தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று வருகிறார் சாய் பல்லவி.
அப்படியாக சாய் பல்லவி அடுத்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பார்க்கிங் திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்த திரைப்படத்தை இயக்க உள்ளார்.
இதில் சாய் பல்லவிக்கு முக்கிய கதாபாத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் வழக்கமான சிம்பு படங்களில் உள்ளது போல இந்த படத்தில் கவர்ச்சி காட்சிகள் வைக்க முடியாது. சாய் பல்லவி அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என பேச்சுக்கள் இருக்கின்றன.
அதே சமயம் இயக்குனர் ராம்குமார் அந்த மாதிரியான கதை கருவை வைத்து திரைப்படம் எடுக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த திரைப்படம் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
