தொடர்ந்து தமிழ் சினிமாவில் சாய் பல்லவியின் சாதனைகள்.. மற்ற நடிகைகள் பக்கத்துல வர முடியாது போல..!

தமிழ் சினிமாவில் தற்சமயம் ஒரு முக்கியமான நடிகையாக மாறி இருப்பவர் நடிகை சாய் பல்லவி. அவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் அவருக்கு வரவேற்பைதான் பெற்று தருகின்றன.

ஏற்கனவே மாரி 2 திரைப்படத்தில் அவர் நடித்த ஆனந்தி என்கிற கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டது. அதற்கு பிறகு அவர் நடித்த கார்கி திரைப்படம் தமிழக அளவில் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் சாய் பல்லவிக்கும் அது நல்ல அந்தஸ்தை பெற்று கொடுத்தது.

சாய்பல்லவியை பொறுத்தவரை வாய்ப்பு கிடைக்கிறது என்று அனைத்து திரைப்படங்களிலும் அவர் நடிப்பதில்லை. பெரும்பாலும் கதையை கேட்ட பிறகுதான் அவர் திரைப்படங்களில் நடிக்கிறார். முக்கியமாக அவரது கதாபாத்திரத்திற்கு கதையில் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடித்து வருகின்றார் சாய்பல்லவி.

சாய்பல்லவியின் மார்க்கெட்:

sai pallavi
sai pallavi
Social Media Bar

இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அமரன் திரைப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான ஒரு கதாபாத்திரமாக சாய் பல்லவியின் கதாபாத்திரம் இருந்தது. இந்த நிலையில் சாய்பாபாவின் மார்க்கெட் இன்னும் அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில் சாய்பல்லவி பாடல்களுக்கு தமிழில் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே சாய் பல்லவியும் தனுஷும் இணைந்து மாரி 2 திரைப்படத்தில் ரவுடி பேபி என்கிற ஒரு பாடலில் ஆடியிருந்தனர்.

அந்த பாடல் பலகோடி பார்வைகளை கடந்து பெரும் சாதனையை படைத்தது. தற்சமயம் அமரன் திரைப்படத்தில் வந்த மின்னலே பாடலும் அதே மாதிரியான சாதனையை படைத்திருக்கிறது. இதற்கு இசையமைப்பாளர் தானே காரணமாக இருக்க முடியும் என்று ஒரு பக்கம் கூறினாலும் கதாநாயகியின் நடனம் மற்றும் முகபாவனைகளும் இந்த பாடல்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

அந்த வகையில் சாய்பல்லவி இதற்கு காரணமாக இருக்கிறார். எனவே தமிழில் இவருக்கு இன்னமும் அதிகமாக வரவேற்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.