பொண்ணுக்கு உடம்புங்குறது துணி மாதிரிதான்!..அதை ரொம்ப புனிதப்படுத்தாதீங்க!.. ஓப்பனாக கூறிய சாய் பல்லவி!.

தமிழ் சினிமா நடிகைகளில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் சாய் பல்லவி. என்னதான் சாய் பல்லவி தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் மலையாளத்தில் வந்த பிரேமம் திரைப்படம் மூலமாகதான் பிரபலமானார்.

அதன் பிறகு மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார். மேலும் தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சாய் பல்லவி நடித்த கார்கி என்கிற திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றது.

அந்த திரைப்பட காலத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசும் பொழுது சில முக்கியமான விஷயங்களை பேசி இருந்தார். முக்கியமாக பெண் குழந்தைகளின் வளர்ப்பு குறித்து பல முக்கியமான கருத்துகளை வெளியிட்டு இருந்தார்.

Social Media Bar

அதில் அவர் கூறும் பொழுது ஒருவேளை எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால் அவள் சின்ன ஆடைகளை போட்டிருந்தால் அப்பொழுது நான் அவளிடம் பெரிய ஆடைகளை போடு என்று கூறமாட்டேன். ஏனெனில் அந்தப் பெண்ணின் மனதில் நமது அம்மா நம்மை எப்படி பார்க்கிறாரோ அப்படித்தான் மற்றவர்களும் பார்ப்பார்கள் என்கிற எண்ணம் இருக்கும்.

அந்த எண்ணத்தை நான் உடைக்க விரும்பவில்லை. அதே சமயம் அவள் வளரும் பொழுது பெண்ணின் உடல் என்பது ஒரு ஆடை போலதான் நமது மூளைதான் நமது உயிர் நாம் அனைவருக்குமே அவர்களது உடல் என்பது ஒரு ஆடை போலதான் என்று கூறுவேனே தவிர பெண்ணின் உடல் புனிதமானது என்று அதை புனிதப்படுத்த மாட்டேன்.

எனவே உனது உடலில் ஏற்படும் தாக்கம் மனதை பாதிக்க கூடாது என்பதை அவளுக்கு சொல்லி வளர்ப்பேன் என்று கூறியிருந்தார் சாய் பல்லவி. இந்த நிலையில் சாய் பல்லவிக்கு அதிகமான பாராட்டுக்கள் வந்துள்ளன.