News
நடிகைகளுடன் அது கூடாது!.. என் கண்டிஷனை மீறிட்டார் ஜிவி பிரகாஷ்.. சைந்தவி ஓப்பன் டாக்!..
தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். வெயில் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக இசையமைப்பாளராக அறிமுகமானார்.
அந்த திரைப்படத்திலேயே வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி என்கிற பாடலும் உருகுதே மருகுதே என்கிற பாடலும் பெரும் வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து ஜிவி பிரகாஷ்க்கும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.
ஆடுகளத்தில் துவங்கி இன்னும் எக்கச்சக்கமான திரைப்படங்கள் அதிக வெற்றியை கொடுத்தன. இதற்கு நடுவே ஜி.வி பிரகாஷ் கதாநாயகனாகவும் அறிமுகமானார்

சினிமா அறிமுகம்:
டார்லிங் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார் ஜிவி பிரகாஷ். அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் திரிஷா இல்லனா நயன்தாரா. அந்த திரைப்படம் அதிக சர்ச்சைக்கு உள்ளானது. அதற்கு பிறகு அந்த மாதிரியான கதைகளத்தையே அவர் தேர்ந்தெடுக்கவில்லை.
இந்த நிலையில் அவருக்கும் அவரது சிறு வயது தோழியான சைந்தவிக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. பல வருடங்கள் உறவுக்கு பிறகு அவர்கள் இருவரும் தற்சமயம் பிரிந்து இருக்கின்றனர். இந்த நிலையில் முன்பு ஒரு பேட்டியிலேயே இதற்கான விடையை சைந்தவி கொடுத்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
மனைவி அளித்த பதில்:
அந்த பேட்டியில் ஜிவி பிரகாசிடம், உங்கள் மனைவி சைந்தவி நீங்கள் நடிகைகளுடன் நடிப்பதை பார்த்து பொறாமைபட்டிருக்கிறாரா என்று ஜிவி பிரகாஷிடம் கேட்ட பொழுது அதெல்லாம் இல்லை என்று கூறியிருந்தார்.

ஆனால் அதே கேள்வியை சைந்தவியிடம் கேட்கும் பொழுது அவர் நடிகராக நடிக்கப் போகிறார் என்று சொன்னதுமே நான் நிறைய கண்டிஷன் போட்டேன். ஆனால் அதை எல்லாம் அவர் பின்பற்றவில்லை என்று கூறியிருக்கிறார்.
இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரும்பாலும் பெண்கள் திருமணமாகும் பொழுது கதாநாயகிகளுடன் நெருக்கமாக நடிக்க கூடாது என்பதை தான் கண்டிஷனாக போட்டு இருப்பார்கள். ஆனால் அதை ஜிவி பிரகாஷ் மீறி இருக்க வேண்டும் என்று பேசப்படுகிறது.
