Cinema History
பிரபுதேவா செய்த காரியத்தால் படப்பிடிப்பில் அழுத சாய்பல்லவி!.. நம்மாளு அவ்வளவு டெரரா!..
Actress Sai pallavi : சாய் பல்லவி தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற நடிகைகளில் முக்கியமானவர் ஆவார். இவர் முதன் முதலாக மலையாளத்தில் ப்ரேமம் திரைப்படம் மூலமாக அறிமுகமானார். தமிழ் நாட்டில் பிறந்தவர் என்றாலும் அவருக்கு மலையாள சினிமாவில்தான் முதல் வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு அவருக்கு தென்னிந்தியா முழுவதும் அதிக வாய்ப்புகள் கிடைத்தது. முக்கியமாக தெலுங்கு சினிமாவில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. எந்த ஒரு நடனமும் கடினமாக இருந்தாலும் கூட அதை எளிதாக ஆட கூடியவராக சாய் பல்லவி இருந்தார்.
ஏனெனில் அவர் ஏற்கனவே நன்றாக நடனமாட கூடியவராக இருந்தார். இந்த நிலையில்தால் தமிழில் மாரி 2 திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் சாய்ப்பல்லவி. அந்த படத்திற்கு டான்ஸ் மாஸ்டராக பிரபு தேவா இருந்தார். பொதுவாக பிரபு தேவாவிடம் நன்றாக நடனமாடும் ஆள் கிடைத்துவிட்டால் சொல்லவா வேண்டும்.
ரவுடி பேபி பாடலுக்காக அவர் சாய் பல்லவிக்கு சில கடினமான நடனங்களை சொல்லி கொடுத்திருந்தார். படப்பிடிப்பிற்கு முன்பு இரண்டு நாட்கள் அதை பயிற்சி செய்துவிட்டு நடனமாட வந்திருந்தார் சாய் பல்லவி. இந்த நிலையில் அந்த நடனம் வேண்டாம் என யோசித்த பிரபு தேவா அந்த இடத்தில் புதிதாக ஒரு நடனத்தை ஆடி அதை அப்படியே ஆட சொன்னார்.
இதை பார்த்ததும் சாய் பல்லவிக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. அது எப்படி உடனே ஒரு நடனத்தை பார்த்து ஆட முடியும் என யோசித்தார். இருந்தாலும் அப்போது வேறு வழியில்லை. எனவே நடனமாட துவங்கினார் சாய் பல்லவி. ஆனால் இருமுறை டேக் போயும் நடனம் நன்றாக வரவில்லை. இதனால் அங்கேயே அழ துவங்கிவிட்டார் சாய் பல்லவி.
பிறகு அவரை ஆறுதல்படுத்தி ஒழுங்காக ஆட வைத்துள்ளார் பிரபுதேவா. இந்த விஷயத்தை சாய்ப்பல்லவி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்