Movie Reviews
Saiyaara படம் எப்படி இருக்கு.. தமிழ் விமர்சனம்..!
இந்தியில் பிரபல திரைப்படமான ஆஷிக் 2 திரைப்படத்தை இயக்கிய மோகித் சூரியின் மற்றொரு திரைப்படம்தான் சய்யாரா. மோகித் சூரியை பொறுத்தவரை தொடர்ந்து காதல் கதைகள் கொண்ட திரைப்படங்களை எடுப்பதை அவர் வேலையாக வைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் கதைப்படி வாணிபத்ரா என்கிற பெண் ஆரம்பத்தில் மகேஷ் என்னும் ஒரு நபரை காதலிக்கிறார். அவனை திருமணம் செய்ய நினைக்கும் போது அவன் தன்னுடைய எதிர்காலத்திற்காக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக கூறி விடுகிறான்.
இந்த நிலையில் இதனால் மனமுடைந்த வாணி பிறகு வேறு வேலைக்கு செல்கிறார். அந்த இடத்தில் தான் க்ரிஷ் கபூர் என்பவரை வாணி சந்திக்கிறார் கிரிஷ் கபூர் ஒரு பாடகர் ஆவார்.
அவருடைய பாடல்களுக்கு பாடல் வரிகளை எழுதி தருவதற்கு அவரால் தேடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் வாணி அந்த பாடல் வரிகளை எழுதி தரும் வேலையில் சேர்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து உருவாகும் பாடல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற துவங்கியிருக்கிறது.
இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே காதலும் உருவாகிறது. ஆனால் சில பிரச்சனைகளின் காரணமாக வாழ்க்கையில் நொந்து போகும் நிலைமைக்கு செல்கிறார்.
இந்த நிலையில் இந்த பிரச்சனைகளை சரி செய்து அவர்கள் இருவரும் எப்படி இணைவார்கள் என்பதாக பத்தின் கதை இருக்கிறது. நடிகை அனன்யா பாண்டேவின் சித்தப்பா மகனான அஹான் பாண்டே இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
அவரது நடிப்பு சிறப்பாகவே இருக்கிறது இந்த நிலையில் இந்த படம் இப்பொழுது பாலிவுட் சினிமாவில் வரவேற்பு பெற துவங்கி இருக்கிறது.
