Connect with us

சமந்தாவுக்கு வந்த அந்த நோய்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

News

சமந்தாவுக்கு வந்த அந்த நோய்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Social Media Bar

பிரபல நடிகையான சமந்தா புதிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே வெளிப்படையாக கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிரபலமான நடிகையாக உள்ளவர் சமந்தா. தமிழில் மாஸ்கோவின் காவேரி படம் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து தெறி, நான் ஈ, மெர்சல் என பல படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கிலும் பல படங்களில் நடித்த சமந்தா சில ஆண்டுகள் முன்னதாக நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்றார். பின்னர் படங்களில் தீவிரமாக நடித்து வரும் சமந்தாவின் ‘யசோதா’ தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாகிறது.

இந்த படத்திற்காக டப்பிங் பேச சென்ற சமந்தா வீல் சேரில் அமர்ந்தபடி, கையில் ட்ரிப்ஸ் போட்ட நிலையில் அமர்ந்திருக்கும் தனது புகைப்படத்தை அவரே ஷேர் செய்துள்ளார். அதில் விளக்கம் அளித்துள்ள அவர் “யசோதா ட்ரெய்லருக்கான உங்கள் கருத்து அமோகமாக இருந்தது. உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்புதான் வாழ்க்கை என் மீது தொடுக்கும் முடிவில்லா சவால்களை சமாளிக்க சக்தி அளிக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னதாக எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இது குணமடைய நீண்ட நாள் எடுத்துக் கொள்கிறது. நான் இன்னும் போராடுகிறேன். நான் உங்களை நேசிக்கிறேன். இதுவும் கடந்து போகும்” என பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த பதிவு ரசிகர்களை சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் சமந்தா விரைவில் நலம் பெற வேண்டும் என அவருக்கு கமெண்டில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Bigg Boss Update

To Top