Connect with us

பிரபாஸ் ரசிகர்களே இப்படிதான்!.. நடவடிக்கை எடுத்த நடிகை சமந்தா!..

samantha prabhas

News

பிரபாஸ் ரசிகர்களே இப்படிதான்!.. நடவடிக்கை எடுத்த நடிகை சமந்தா!..

Social Media Bar

மாஸ்கோவின் காவேரி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சமந்தா. முதல் படம் அவ்வளவாக அவருக்கு வரவேற்பை பெற்று தரவில்லை என்றாலும் கூட தொடர்ந்து சமந்தாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பு கிடைக்க துவங்கியது.

அதில் முக்கிய படமாக நான் ஈ திரைப்படம் அமைந்தது. தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் சமந்தா வரவேற்பை பெற நான் ஈ திரைப்படம் உதவியது. இதனை தொடர்ந்து பிரபலமான சமந்தா தமிழில் சூர்யா, விஜய் மாதிரியான முன்னணி நடிகர்களுடன் நடிக்க துவங்கினார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு உடல் நிலை பிரச்சனைகள் ஏற்பட்டதால் திரைப்படத்தில் நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சில காலங்களாகவே திரைப்படங்களில் நடிக்காமல் தனது உடல் நிலையை பார்த்து வருகிறார் சமந்தா.

samantha
samantha

இந்த நிலையில் சமீபத்தில் குணமடைந்து வருகிறேன் என பதிவிட்டு குளியல் அறை புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார் நடிகை சமந்தா. அந்த புகைப்படத்தை எடுத்து அதனுடன் ஆபாசமான மற்றொரு புகைப்படத்தையும் வெளியிட்டு இதுவும் சமந்தா புகைப்படம்தான் என இணையத்தில் வளம் வர விட்டிருந்தனர்.

இந்த நிலையில் தற்சமயம் பிரபாஸ் ரசிகர் ஒருவர்தான் எக்ஸ் தளத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது கணக்கு முடக்கப்பட்டது. மேலும் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

To Top