Tamil Cinema News
என்னை நானே செதுக்கியிருக்கேன்.. யாரு யாரை கல்யாணம் பண்ணுனா என்ன?. அரவிந்த்சாமி மாதிரி பேசிய சமந்தா..!
தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா.ஆரம்பத்தில் சமந்தா நடிக்கும் திரைப்படங்களுக்கு பெரிதாக வரவேற்பு என்பது கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு பிறகு வெளிவந்த நான் ஈ திரைப்படம் தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் அவருக்கு வரவேற்பை பெற்று தந்தது.
அதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு இரண்டிலும் வரவேற்பை பெற்று வந்தார் சமந்தா. ஆரம்பத்தில் சமந்தாவிற்கும் நடிகர் சித்தார்த்துக்கும் இடையே காதல் இருந்ததாக பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் உண்மையில் அவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்தார்.
இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் சில காலங்களிலேயே இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் அடுத்ததாக மயோசிடிஸ் என்கிற அரிய வகை நோயின் பாதிப்புக்கு உள்ளானார் சமந்தா.
இதனால அவரால் திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போனது. நிறைய பண செலவுகளுக்கு பிறகு தற்சமயம் சமந்தா உடல் நலம் சரியாகி மீண்டும் சினிமாவிற்கு எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேட்டியில் பேசியப்போது நிறைய விஷயங்களை வெளிப்படையாக பேசியிருந்தார்.
அதில் பேசிய சமந்தா கூறும்போது இந்த சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு பின்னால் யார் இருக்காங்கன்னு பார்த்துதான் அவங்களுக்கான ரூல்ஸை அமைக்கிறாங்க. ஆனால் எனக்கு பின்னாடி அப்படி யாரும் இல்லை. என் வயசு பொண்ணுங்க கல்யாணம் பண்ணி குழந்தைகள் என வாழாமல் இருந்தால் அவர்கள் என்னதான் சாதிச்சாலும் அவங்களை தப்பாதான் பேசுறாங்க. ஆனால் எனக்கு அதை பத்தி எல்லாம் கவலை இல்லை.
ஆமா சாமி போடுற கூட்டத்தை மட்டும் கூட வச்சிக்காதீங்க. அது உங்களை கெடுத்துடும் என கூறியுள்ளார் சமந்தா.
