Connect with us

வாய்ப்புக்காக சமுத்திரகனி செய்த செயல்!.. ஆடிப்போன இயக்குனர்..

samuthrakani

Cinema History

வாய்ப்புக்காக சமுத்திரகனி செய்த செயல்!.. ஆடிப்போன இயக்குனர்..

Social Media Bar

சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சமுத்திரக்கனி. பல படங்களில் சமுத்திரக்கனி அவர் நடிக்கும் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருப்பார். இதனாலேயே தென்னிந்தியா முழுவதும் அவருக்கு பல படங்களில் வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.

வாய்ப்பு தேடிய ஆரம்பக்காலக்கட்டங்களில் எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் நடிக்கலாம் என்று இருந்துள்ளார் சமுத்திரகனி. இந்த நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி, நீர் பறவை என்கிற திரைப்படத்தை இயக்கி வந்தார்.

அப்போது அந்த படத்தில் சமுத்திரக்கனியும் வேலை பார்த்து வந்தார். அந்த படத்தில் முஸ்லீம் பாய் கதாபாத்திரத்தில் ஒரு நடிகர் நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் அந்த நடிகருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இருந்ததால் அவரால் வர முடியவில்லை.

இந்த நிலையில் யாரை வைத்து இந்த படத்தை எடுப்பது என சந்தேகத்தில் இருந்துள்ளார் சீனு ராமசாமி. அப்போது சமுத்திரக்கனியிடம் பாய் கதாபாத்திரத்தில் நடிக்கிறாயா? என எதார்த்தமாக கேட்டுள்ளார் சீனு ராமசாமி.

உடனே அதற்கு நடிக்கிறேன் என ஒப்புக்கொண்ட சமுத்திரகனி வேக வேகமாக முடியெல்லாம் வெட்டி முஸ்லீம் பாய் போன்று ஆடைகளை உடுத்திக்கொண்டு வந்து நின்றுள்ளார். அதை பார்த்து ஆடி போயுள்ளார் இயக்குனர். வாய்ப்புக்காக இவ்வளவு வெறியோடு காத்துக்கொண்டுள்ளானே என அந்த படத்தில் சமுத்திரகனிக்கு வாய்ப்பு கொடுத்தார் சீனுராமசாமி.

To Top