ஒரு காலக்கட்டத்தில் 90ஸ் கிட்ஸ்களின் கனவு கண்ணியாக இருந்தவர் விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா. அவர் டென்னிஸ் விளையாடும் அழகை பார்ப்பதற்காகவே நிறைய நபர்கள் கிரிக்கெட் பார்ப்பதை விடுத்து டென்னிஸ் பார்க்க துவங்கினர்.
அந்த அளவிற்கு இந்தி மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சானியா மிர்சா. சானியா மிர்சாவின் சொந்த வாழ்க்கையை பொறுத்தவரை அது அவ்வளவு சுமூகமாக இருக்கவில்லை. அவர் ஆரம்பத்தில் சோயப் மாலிக் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
ஆனால் அவர்கள் திருமண வாழ்க்கை வெகு காலங்கள் நீடிக்கவில்லை. சீக்கிரத்திலேயே சானியா மிர்சா தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்ததாக ஒரு கிரிக்கெட் வீரரை இவர் காதலித்து வந்ததாக பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் அவையெல்லாம் புரளிகளே இப்போதைக்கு யாரையும் காதலிக்கவில்லை என திட்டவட்டமாக கூறியிருந்தார் சானியா மிர்சா.
இந்த நிலையில் தற்சமயம் இவர் ஒரு தெலுங்கு நடிகரை காதலித்து வருவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் இது உண்மையா என தெரியவில்லை. இதுக்குறித்து சானியா மிர்சா பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.