Tamil Cinema News
அந்த ஏன் நடிகையை விட்டுட்டேனேன்னு இப்ப தோணுது.. ஓப்பன் டாக் கொடுத்த சந்தானம்..!
சாதாரண காமெடி நடிகராக சின்னத்திரையில் நடித்து பிறகு வெள்ளித்திரையில் வாய்ப்புகளை பெற்று இப்பொழுது கதாநாயகனாக மாறியிருப்பவர் சந்தானம்.
சந்தானத்தின் திரை பயணம் என்பது மிக நீண்டது என்று கூறலாம். வெகு வருட போராட்டத்திற்கு பிறகுதான் சந்தானத்திற்கு ஓரளவு அடையாளம் என்பதே கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் சந்தானம் நடிகை சமந்தா குறித்து கூறினார் அதில் அவர் கூறும் பொழுது பல்லாவரத்தில் அருகில் இருக்கும் ஒரு பள்ளியில் பெண்களை பார்ப்பதற்காக நான் பள்ளி காலத்திலிருந்து செல்வேன்.
அந்த பள்ளியில் தான் சமந்தாவும் படித்திருந்தார். பல்லாவரம் மார்க்கெட்டில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை விட்டு விட்டோமே என்று பிறகு தான் எனக்கு தோன்றியது என்று சமந்தா குறித்த தனது நினைவுகளை பகிர்ந்திருக்கிறார் சந்தானம்.
இதே மாதிரி சமந்தா முன்பு ஒரு பேட்டியில் கூறும்பொழுது சந்தானம் தனது பள்ளிக்கு வந்து பெண்களை எல்லாம் பார்ப்பார் பெண்கள் பலருக்கும் சந்தனத்தை பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.
