விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்ததன் மூலமாக அதிக பிரபலமடைந்தவர் நடிகர் சந்தானம். அந்த நிகழ்ச்சியில் நடித்ததன் மூலமாக மிக பிரபலமடைந்தார் சந்தானம். அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு அவருக்கு வாய்ப்பை பெற்று கொடுத்தார்.
இந்த நிலையில் சினிமாவில் வாய்ப்பை பெற்ற சந்தானம் தனது சிறப்பான காமெடி திறமையால் தமிழ் சினிமாவின் முக்கியமான காமெடியனாக மாறினார். ஒரு கட்டத்திற்கு பிறகு பெரும்பாலான திரைப்படங்களில் சந்தானம் நடிப்பதை பார்க்க முடியும்.
இவ்வளவு வரவேற்புகள் கிடைத்த நிலையில்தான் அவர் கதாநாயகனாக அறிமுகமானார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான சந்தானத்துக்கு முதலில் படங்கள் பெரிதாக வெற்றியை தரவில்லை என்றாலும் போக போக வெற்றியடைய துவங்கினார்.
இந்த நிலையில் அவரது நடிப்பில் வெளியான ஏ1, தில்லுக்கு துட்டு மாதிரியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் சந்தானத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவர் அளவிற்கு ஒரு காமெடி நடிகர் வரவே இல்லை.

இதனால் நடிகர் சிம்புவே ஒரு பேட்டியில் சந்தானம் மீண்டும் காமெடியனாக வர வேண்டும் என கேட்டிருந்தார். அதே போல இப்போது வெளியான மத கஜ ராஜா திரைப்படத்திலும் சந்தானத்தின் காமெடிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே சந்தானம் காமெடியனாக நடிக்க வேண்டும் என்பது மக்களின் ஆசையாகவும் இருக்கிறது.
எனவே மீண்டும் சந்தானம் காமெடி நடிகராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சிம்புவுடன் ஒரு காமெடி படம், பாஸ் என்கிற பாஸ்கரன் 2, மத கஜ ராஜா 2 ஆகிய திரைப்படங்களில் அவர் அடுத்து நடிக்க போவதாக பேச்சுக்கள் இருக்கின்றன.
இந்த நிலையில் சந்தானம் இப்போது கதாநாயகனாக நடித்து வருவதால் காமெடி செய்தாலும் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரமாகதான் இவரது கதாபாத்திரம் இருக்கும். இவருக்கும் கதாநாயகி, டூயர் பாடல்கள், சண்டை காட்சிகள் எல்லாம் இருக்கும் என்று கூறப்படுகிறது.






