Tamil Cinema News
தொல்லை பண்ணுனா கேவலமா பண்ணிடுவேன்.. ரஜினிகாந்திடம் ஓப்பனாக சொன்ன பிரபலம்..!
காலம் காலமாக நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து பெரிய பெரிய இயக்குனர்கள் திரைப்படத்தில் மட்டுமே நடித்து வந்து கொண்டிருந்தார். வெகு காலங்களுக்கு பிறகு தான் புதிய இயக்குனர்களுக்கு அவர் வாய்ப்புகளை கொடுக்கத் தொடங்கினார்.
அதற்கு முக்கிய காரணம் தொழில் ரீதியாக அவருக்கு ஏற்பட்ட தோல்விதான். தொடர்ந்து கோச்சடையான் மற்றும் லிங்கா ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரஜினிகாந்துக்கு தோல்வியை கொடுத்த பிறகு அவரது மகள் கொடுத்த அறிவுரையின் பேரில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் கபாலி திரைப்படத்தில் நடித்தார்.
கபாலி திரைப்படம் ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது அதற்குப் பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் இளைஞர்களாக இருக்கும் சின்ன சின்ன இயக்குனர்களின் படங்களில்தான் நடித்து வருகிறார். அவை எல்லாமே அவருக்கு நல்ல வெற்றியையும் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் கபாலி திரைப்படத்தில் அவருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து சந்தோஷ் நாராயணன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும் பொழுது ரஜினி சாரிடம் நான் பேசும்பொழுது எனக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்றேன்.
நான் ஒரு பாடல் உங்களுக்கு போட்டு தருகிறேன் அது நன்றாக இல்லை என்றால் வேறு பாடல் போடுகிறேன். அப்படியும் பிடிக்கவில்லை என்றால் நான் படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன். ஆனால் இப்படியெல்லாம் பாடல் வேண்டும் என்று என்னை தொல்லை செய்தால் பாடல்கள் கேவலமாக வந்துவிடும் என்று நான் ரஜினி சாரிடம் கூறினேன்.
அவரும் என்னிடம் நான் அப்படியெல்லாம் உங்களிடம் எதுவும் கூற மாட்டேன் என்று கேட்டார். அதனால்தான் கபாலியில் நல்லபடியாக இசையமைக்க முடிந்தது என்று கூறியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.
