Tamil Cinema News
பின்ன உன் வாயிலையா அதை பண்ண முடியும்… பத்திரிக்கையாளருக்கு சரத்குமார் கொடுத்த பதிலடி..!
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமாகி பிறகு ஹீரோ நடிகராக மாறியவர் நடிகர் சரத்குமார். பெரும்பாலும் சினிமாவில் அறிமுகமாகும்போது வில்லன் நடிகராக அறிமுகமாகும் நடிகர்களுக்கு பிறகு கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்புகள் அமைவதில்லை.
அதனாலேயே பெரும்பாலான நடிகர்கள் கதாநாயகனாகவே அறிமுகமாகிறார்கள். ஆனால் தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து வில்லனாக களம் இறங்கி பிறகு ஹீரோவாக நடிக்க துவங்கினார் சரத்குமார்.
ரஜினி கமல் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த அதே காலக்கட்டத்தில் சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த் மாதிரியான நடிகர்களும் கூட அவர்களுக்கு சமமமான அளவில் வளர்ந்து வந்தனர். ஒரு காலத்தில் இவர்கள் எல்லாம் ரஜினிகாந்துக்கு போட்டி நடிகர்களாக இருந்தனர்.
இந்த நிலையில் சரத்குமார் அப்போது நிறைய வரவேற்பை பெற்றிருந்தாலும் கூட போக போக அவருக்கு வரவேற்பு குறைந்தது. இந்த நிலையில் சரத்குமார் துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். இப்போதும் நிறைய திரைப்படங்களில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதை பார்க்க முடியும்.
போர் தொழில், மழை பிடிக்காத மனிதன் மாதிரியான திரைப்படங்களில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை பார்க்க முடியும். இந்த நிலையில் தற்சமயம் பிரபுதேவா இயக்கத்தில் சரத்குமார் நடித்து வரும் திரைப்படம் கண்ணப்பன் என்கிற திரைப்படமாகும்.
இந்த திரைப்படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய சரத்குமார் கண்ணப்பன் படத்தை பார்க்கும்போது கோவில் பக்கம் செல்லாதவர்களும் சிவனை வணங்க கோவில் செல்வர். அந்த அளவிற்கு படம் இருக்கிறது என கூறியிருந்தார்.
அதுக்குறித்து கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர் சார் சிவன் பக்தி இல்லாதவங்களும் அவரை கும்பிடுவாங்கன்னு உங்க வாயால சொன்னீங்க? அதுக்கு வாய்ப்பிருக்கா? என கேட்டனர்.
அதற்கு பதிலளித்த சரத்குமார் என் வாயில்தான் சொல்ல முடியும். பின்ன உங்க வாயிலா சொல்ல முடியும். அதாவது நான் ஏதோ மதமாற்றம் செய்ய சொன்னது போல நீங்கள் பேசுகிறீர்கள். நான் அப்படி சொல்லவில்லை. கடவுள் நம்பிக்கை இருந்தும் கோவில் பக்கம் செல்லாமல் இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு ஆவலை இந்த படம் ஏற்படுத்தும் எனதான் கூறுகிறேன் என பதிலளித்துள்ளார் சரத்குமார்