Tamil Cinema News
இது சின்ராசு இல்லப்பா பெரிய ராசு.. குடும்பத்தை விட்டு மருமகனை தள்ளி வைத்த சரத்குமார்.. இதுதான் காரணம்.!
வில்லன் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிறகு கதாநாயகனாக மாறியவர் நடிகர் சரத்குமார். பொதுவாகவே சினிமாவில் அறிமுகமாகும்போது நடிகர்கள் யாருமே வில்லனாக அறிமுகமாக மாட்டார்கள். ஏனெனில் அப்படி அறிமுகமாகும்போது அவர்களை யாரும் கதாநாயகனாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தொடர்ந்து வில்லனாகவே அவர்களுக்கு வாய்ப்பு வந்த வண்ணம் இருக்கும். ஆனால் சரத்குமார் விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. ஆரம்பத்தில் மிக மோசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதற்கு பிறகு அவருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதற்கு பிறகு கதாநாயகனாக நிறைய படங்களில் வெற்றி கொடுத்து வந்தார் சரத்குமார். இந்த நிலையில் தற்சமயம அவரது மகளான வரலெட்சுமி சரத்குமாரும் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்று நடித்து வருகிறார். மகளே சினிமாவிற்கு வந்த பிறகும் கூட இன்னமும் சரத்குமாரும் வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு குடும்ப வீடியோவை தயார் செய்து வெளியிட்டிருந்தார். சூர்ய வம்சம் திரைப்படத்தில் ஒரு பிரபலமான காட்சி இருக்கும். அந்த காட்சியில் சின்ராசு கதாபாத்திரத்தை விட்டு விட்டு குடும்பத்தில் உள்ள அனைவரும் போட்டோ எடுப்பார்கள்.
அப்போது ராதிகா சரத்குமாரிடம் நம்ம சின்ராசு என கேட்க, எண்ட்ர குடும்பத்துல எல்லோரும் வந்தாச்சு என சரத்குமார் கூறுவார். இந்த வீடியோவை அப்படியே ரீ க்ரீயேட் செய்துள்ளனர். அந்த வீடியோவில் வரலெட்சுமியின் கணவர் சின்ராசு கதாபாத்திரம் போல ஓரமாக நின்றுக்கொண்டுள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.