Connect with us

அரசியல்வாதியா இருந்துகிட்டு இந்த படத்துல நடிக்கிறீங்கன்னு கேட்டாங்க!.. பயந்துக்கொண்டே சரத்குமார் நடித்த திரைப்படம்!.

sarathkumar

Cinema History

அரசியல்வாதியா இருந்துகிட்டு இந்த படத்துல நடிக்கிறீங்கன்னு கேட்டாங்க!.. பயந்துக்கொண்டே சரத்குமார் நடித்த திரைப்படம்!.

Social Media Bar

Actor Sarathkumar : நடிகர் அர்ஜுனுக்கு பிறகு கட்டுமஸ்தான உடலை கொண்டு இன்னமும் வயது தெரியாமல் தன்னை காட்டிக் கொள்பவர் நடிகர் சரத்குமார்.

சண்டை காட்சிகளுக்கு சரத்குமார் மிகவும் பிரபலமானவர். அவரது திரைப்படங்களில் எப்போதுமே சண்டை காட்சிகள் இருக்கும். விஜயகாந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த அதே காலகட்டத்தில்தான் சரத்குமாரும் வளர்ந்து வந்தார்.

கிட்டத்தட்ட சரத்குமார் விஜயகாந்த் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என கூறலாம். இவர்கள் அனைவருமே சமகாலத்தில் கதாநாயகனாக நடித்து வந்தவர்கள். அதேபோல சில காலங்களுக்குப் பிறகு விஜயகாந்துக்கு இருக்கும் அளவிற்கு மார்க்கெட் சரத்குமார் இல்லாமல் போனது.

நடிகர் சரத்குமார் எடுத்த முடிவு:

விஜயகாந்த் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வந்த காலங்களில் குறைந்த அளவிலேயே சரத்குமார் திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அவர் நடித்த காஞ்சனா திரைப்படம் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.

அதில் பேசும்பொழுது திருநங்கை கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்க வேண்டும் என்று கூறிய பொழுது அது அவருக்கே கொஞ்சம் ஐயத்தை ஏற்படுத்தியது. ஆனால் ராகவா லாரன்ஸ் கூறும் பொழுது திருநங்கைகள் குறித்த நல்ல விஷயத்தை படத்தில் பேசுகிறோம்.

அதை நீங்கள் பேசினால்தான் மக்கள் மத்தியில் பதிவாகும் என்று கூறியிருக்கிறார். அந்த திரைப்படத்தில் நடிக்கும் பொழுதே ஒரு அரசியல்வாதியாக இருந்து கொண்டு திருநங்கையாக நடிக்கிறீர்களே என்று பலரும் தன்னை கேலி செய்ததாக சரத்குமார் கூறுகிறார்.

மேலும் சரத்குமார் பேசும் பொழுது முதல் காட்சியில் புடவையில் வரும் என்னை பார்த்து மக்கள் சிரித்து விட்டால் இந்த படம் தோல்வி அடைந்து விடும். அவர்கள் சிரிக்காத வண்ணம் காட்சியை அமைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார் அதன்படியே ராகவா லாரன்ஸ் காட்சியை அமைத்திருந்தார். அவ்வளவு பயத்தில் நடித்திருந்தாலும் கூட சரத்குமாருக்கு பெரும் பேரை வாங்கி கொடுத்த திரைப்படமாக காஞ்சனா இருந்தது.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top