Cinema History
உண்மையில் பணக்காரந்தான் ஈஸியா ஏமாறுவான்!.. வச்சி செய்த சர்தார் இயக்குனர்!..
தமிழில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பி.எஸ் மித்ரன். உலக அரசியலில் மக்களுக்கு எதிராக நடக்கும் பல விஷயங்களை வெளிப்படுத்தி படம் எடுக்க கூடியவர் பி.எஸ் மித்ரன்.
அவர் இயக்கிய ஹீரோ, இரும்பு திரை, சர்தார் என அனைத்து திரைப்படங்களுமே மக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் படங்களாகவே இருந்தன. சர்தார் படம் வெளியான பிறகு பல மக்கள் ப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை தவிர்ப்பதை சமூகத்தில் பார்க்க முடிந்தது.
அடிக்கடி அவர் தனது பேட்டியில் பல விஷயங்களை பேசுவதை பார்க்க முடியும். அப்படி ஒரு பேட்டியில் பேசும்போது கார்ப்பரேட் அரசியல் குறித்து பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது ரோல்ஸ் ராய்ஸ், ரோலக்ஸ் மாதிரியான நிறுவனங்கள் எப்போதுமே பணக்காரர்களுக்காகதான் பொருட்களை விற்கின்றன.
அவர்கள் விற்கும் எந்த பொருளையும் பாமர மக்களால் வாங்க முடியாது. அதுதான் அந்த நிறுவனத்தின் ஏமாற்று வேலையே. பணக்கார நிறுவனங்கள் பணக்காரர்களை ஏமாற்றியே பொருட்களை விற்கின்றன. அந்த நிறுவனத்தின் பெயருக்காக பணக்காரர்களும் அதை அதிக காசு கொடுத்து வாங்குகின்றனர்.
உண்மையில் பணக்காரர்கள்தான் எளிதில் ஏமாறுகிறார்கள். அதனால்தான் முதலில் ஃபில்டர் வாட்டர் என கொண்டு வரும்போது அதை பணக்காரர்களிடம்தான் அறிமுகப்படுத்தினார்கள். பணக்காரர்களும் உடனே அதை பயன்படுத்த துவங்கிவிட்டனர்.
ஆனால் ஏழைகளிடம் அதை எளிதாக கொண்டு செல்ல முடியாது. எனவேதான் அவர்களிடம் தண்ணீர் பயத்தை உருவாக்கினார்கள். அவர்கள் காலம் காலமாக குடிக்கும் தண்ணீர் அசுத்தமானது என்கிற பயத்தை உண்டாக்கிதான் பாமர மக்களிடம் தண்ணீரை விற்பனை செய்தார்கள் என தண்ணீர் அரசியல் குறித்து பி.எஸ் மித்ரன் தனது பேட்டியில் கூறியிருந்தார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்