Tamil Cinema News
சிம்ரன் குறித்து நிருபர் கேட்ட எதிர்பாராத கேள்வி.. பதிலடி கொடுத்த சசிக்குமார்.!
சமீப காலங்களாகவே கதைகளை தேர்ந்தெடுத்துதான் அதில் நடித்து வருகிறார் நடிகர் சசிக்குமார். நடிகர் சசிக்குமார் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் இயக்குனராகதான் அறிமுகமானார். அவரது இயக்கத்தில் வந்த திரைப்படங்களுக்கு ஆரம்பத்தில் வரவேற்பு இருந்தது.
அதற்கு பிறகு கதாநாயகனாகவே நல்ல வரவேற்பை பெற்றார் சசிக்குமார். ஆரம்பத்தில் அவர் நடித்த சுப்ரமணியப்புரம், நாடோடிகள், சுந்தர பாண்டியன், போராளி மாதிரியான திரைப்படங்களுக்கு எல்லாம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து வரிசையாக கதாநாயகனாக நடித்து வந்தார் சசிக்குமார். இடையில் கொஞ்சம் ஆக்ஷன் படங்களாகவும் நடித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடித்த அயோத்தி என்கிற திரைப்படம் தமிழ்நாட்டு அளவில் வரவேற்பை பெற்ற படமாக இருந்தது.
அதனை தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார் சசிக்குமார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்று நடந்தது. அதில் நிருபர் ஒருவர் கேட்கும்போது சிம்ரனுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது என கேட்டார். அதற்கு பதிலளித்த சசிக்குமார் சந்தோஷமாகதான் இருந்தது. முதலில் கதை சொல்லும்போது அதில் சிம்ரன் நடிக்கிறார் என்பது முடிவு செய்யவில்லை.
பிறகு இயக்குனர் கூறியதற்கு பிறகுதான் சிம்ரனை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தோம். அவரும் சிறப்பாக நடித்திருந்தார் என பதில் கூறியுள்ளார் சசிக்குமார்.
