மன்சூர் அலிக்கான் மாதிரியே சத்யராஜ் பண்ணுன சம்பவம்!.. ஆனா சிக்குனது நயன்தாரா…
கடந்த சில நாட்களாக த்ரிஷா மற்றும் மன்சூர் அலிக்கான் பிரச்சனைதான் இணையத்தில் பெரும் பிரச்சனையாக சென்று கொண்டுள்ளது. ஒரு பேட்டியில் பேசிய அவர் முன்பெல்லாம் சினிமாவில் வில்லன்களுக்கு படுக்கையறை காட்சிகள் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் நடிகைகளை கண்ணிலேயே காட்டுவதில்லை என பேசியிருந்தார். மேலும் லியோ படத்தில் கூட த்ரிஷாவை பார்க்கவே இல்லை என கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக த்ரிஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதில் எழுதியிருந்தார். இந்த நிலையில் நடிகை குஷ்பு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் த்ரிஷாவிற்கு ஆதரவு அளித்து வந்தனர்.
திரிஷாவிற்கு ஆதரவு கொடுத்ததால் கடந்த இரண்டு நாட்களாக சிரஞ்சீவியும் ரசிகர்களிடம் சிக்கி கொண்டார். அவர் நடிகைகளிடம் அத்து மீறியதாக கூறப்படும் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன் அவரை விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் தற்சமயம் அதில் நடிகர் சத்யராஜும் சிக்கியுள்ளார்.

ராஜா ராணி திரைப்படத்தின் விழாவில் பேசிய சத்யராஜ் கூறும்போது படங்களில் எனக்கு மகளாக அழகான கதாநாயகியை வைக்க வேண்டும். மேலும் ஒரு காட்சியிலாவது அந்த கதாநாயகி என்னை கட்டிப்பிடித்து அழுவது போன்ற காட்சியை படத்தில் வைக்க வேண்டும். மேலும் இந்த படத்தில் ஆர்யா, ஜெய்யை விட எனக்கும் நயன்தாராவிற்கும்தான் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது என கூறியிருந்தார் சத்யராஜ்.
சத்யராஜ் இப்படி பேசுவது மட்டும் நியாயமா என இதுக்குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள். ஆனால் இதுக்குறித்து மற்றொரு சாரார் பேசும்போது நீங்கள் கூறும் விஷயம் சம்பந்தப்பட்ட நபருக்கு நகைச்சுவையாக தெரிந்தால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஒருவேளை அது அவரது மனதை புண்படுத்தும் வகையில் இருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும்.
சத்யராஜை பொறுத்தவரை அவர் கூறிய விஷயம் நயன்தாரா மனதை புண்படுத்தவில்லை. ஆனால் மன்சூர் அலிக்கான் விஷயத்தில் அப்படியல்ல என விளக்கம் தருகின்றனர் சத்யராஜ் ரசிகர்கள்.