தன் மேனஜருக்கு கூட கொடுக்காத சலுகையை அர்ஜுனுக்கு காட்டிய சத்யராஜ்!..

தமிழ் சினிமாவில் பைசா பாக்கியில்லாமல் கொடுத்த காசை வசூல் செய்யும் சில நடிகர்கள் உண்டு. அதில் முக்கியமானவர் நடிகர் சத்யராஜ். சத்யராஜை பொறுத்தவரை அவர் நடிக்கும் திரைப்படங்களில் பெரும்பாலும் சம்பள பாக்கி இல்லாமல் பார்த்துக்கொள்வாராம்.

படத்திற்கான முழு தொகையையும் வாங்கி கொண்டுதான் நடிக்கவே துவங்குவார் சத்யராஜ் என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு சம்பள விஷயத்தில் மிகவும் கரரான ஆளாக அவர் இருந்துள்ளார். அவரது மேனஜர் சத்யராஜை வைத்து நடிகன் மாதிரியான சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

sathyaraj
sathyaraj
Social Media Bar

அந்த திரைப்படங்களில் நடித்து சத்யராஜும் நல்ல வெற்றியை கொடுத்துள்ளார். இந்த நிலையில் தனது சொந்த மேனஜர் படம் தயாரித்தப்போதும் கூட சம்பள பணத்தை சரியாக பெற்றுக்கொண்டார் நடிகர் சத்யராஜ்.

இப்படி இருக்கும் நிலையில் தற்சமயம் சத்யராஜ் அர்ஜுன் தயாரிக்கும் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தில் அர்ஜுனின் மகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு 50 லட்சம்தான் சம்பளமாக வாங்கியுள்ளாராம் சத்யராஜ்.

தற்சமயம் மார்க்கெட் விலைப்படி சத்யராஜ் 1.5 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வருகிறாராம். இந்த நிலையில் அர்ஜுன் தனது நண்பன் என்கிற காரணத்தால் இந்த அளவிற்கு குறைவான தொகைக்கு நடித்து கொடுத்துள்ளார் சத்யராஜ்.