Cinema History
எனக்கு கெட்ட நேரத்துல கெடச்ச வாய்ப்பு முரளியோட பண்ணுன படம்!.. கதையையே மாத்திட்டாரு!.. இயக்குனருக்கு நடந்த சோகம்!.
ஒவ்வொரு இயக்குனருக்கும் அவர்கள் இயக்கும் ஒவ்வொரு படமும் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும். ஏனெனில் ஒரு படம் தோல்வியை கண்டால் அது ஹீரோவையும் தயாரிப்பாளரையும் கூட அதிகமாக பாதிக்காது. ஆனால் இயக்குனருக்கு அது அதிக பாதிப்பை உண்டாக்கும்.
எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்தால் அவர்களுக்கு மார்க்கெட் இல்லாமல் போய்விடும். அப்படி சினிமாவில் தனது படத்தில் எடுத்த ரிஸ்க் குறித்து இயக்குனர் விஜி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இவர் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வெளியான திரைப்படம் அள்ளி தந்த வானம். இந்த படம் வெளிவந்த சமயத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றது. அவர் இந்த படத்தை இயக்க இருந்த சமயத்தில் பிரபுதேவாவும் நடிகை பூர்ணிதாவும் மட்டும்தான் படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகி இருந்தனர்.

வேறு யாருமே உறுதியாக படத்தில் நடிக்க இருப்பதாக கூறவில்லை. இந்த நிலையில் படத்தில் ஒரு முக்கியமான கெஸ்ட் கதாபாத்திரத்திற்கு பெரிய நடிகர்களிடம் பேசி வந்தார் இயக்குனர். ஆனால் யாருமே ஒப்புக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் முரளி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் வந்தோம் போனோம் என எனக்கு கதாபாத்திரம் இருக்க கூடாது. குறைந்தது அந்த படத்தில் எனக்கு இரண்டு சண்டை காட்சிகளாவது வேண்டும் என முரளி கேட்டுள்ளார்.
எனவே கதையை அதற்கு தகுந்தாற் போல மாற்றி அமைத்தார் இயக்குனர். படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் அந்த மாற்றப்பட்ட காட்சிகள் படத்தில் ஒரு நெருடலான விஷயமாகவே இருந்தது. இதுக்குறித்து இயக்குனர் ஒரு பேட்டியில் கூறும்போது சிலருக்கு நல்ல நேரத்தில் பட வாய்ப்பு கிடைக்கும் சிலருக்கு கெட்ட நேரத்தில் கிடைக்கும் எனக்கு கெட்ட நேரத்தில் கிடைத்துவிட்டது என நினைக்கிறேன் இவ்வாறு கூறியுள்ளார்.
