Tamil Cinema News
போடா பு#டா மவனே.. சரக்கை எடுத்துக்கொண்டு என் வீட்டுக்கு வந்தான்.. விஷால் குறித்து சர்ச்சையை கிளப்பிய பாடகி..!
சமீப காலங்களாக அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் நடிகராக நடிகர் விஷால் இருந்து வருகிறார். ஒரு காலத்தில் சண்டக்கோழி, தாமிரப்பரணி என நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் விஷால்.
ஆனால் இப்போது அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் சமீபத்தில் மதகஜ ராஜா திரைப்படத்தில் ஒரு 12 வருடங்களுக்கு முன்பு விஷால் நடித்திருந்தார். சில காரணங்களால் அந்த படம் வெளியாவதில் சிக்கல் இருந்து வந்தது.
இந்த நிலையில் வருகிற பொங்கலை முன்னிட்டு அந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இதுக்குறித்து நடந்த விழாவில் விஷால் கலந்துக்கொண்டார். அப்போது விஷால் பேசும்போது அவரது கைகள் நடுங்கி கொண்டு இருப்பதை பார்க்க முடிந்தது.
இதனையடுத்து உண்மையிலேயே விஷாலுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என ஒரு பக்கம் பேச்சுக்கள் சென்று கொண்டுள்ளன. இந்நிலையில் இதுக்குறித்து பிரபல சர்ச்சை பாடகி சுசித்ரா பேசியுள்ளார்.
அவர் பேசும்போது ஒரு நாள் எனது கணவர் கார்த்திக் இல்லாத நேரத்தில் விஷால் எங்கள் வீட்டுக்கு வந்தான். அவனது கண்கள் பற்கள் எல்லாம் மஞ்சளாக இருந்தது. கையில் ஒரு ஒயின் பாட்டில் வைத்திருந்தான். அவன் என்னிடம் கார்த்திக் இல்லையா என கேட்டான்.
நான் இல்லை என்றேன். நான் ஒயின் குடிக்க வேண்டும் உள்ளே வரவா? எனக் கேட்டான். நான் முடியாது.. கார்த்திக் கௌதம் மேனன் அலுவலகத்தில் இருக்கிறான். வேண்டும் என்றால் அங்கு சென்று போய் பார் என்றேன். அவன் கிளம்பினான். எனக்கூறிய சுசித்ரா அவனை கெட்ட வார்த்தையில் திட்டியதாகவும் பதிவு செய்துள்ளார்.