Tamil Cinema News
விவாகரத்துக்கு இதுதான் காரணம்..! பார்த்திபன் சொல்வது உண்மையில்லை.. உடைத்து பேசிய சீதா..!
இயக்குனர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து பிறகு இயக்குனராக மாறியவர் பார்த்திபன். பார்த்திபன் உதவி இயக்குனராக இருந்த காலம் முதலே அவர் சீதாவை காதலித்து வந்தார். பிறகு சீதாவும் பார்த்திபனை காதலித்தார்.
அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். பல வருடம் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த பிறகு ஒரு கட்டத்திற்கு பிறகு இருவருமே பிரிந்து விட்டனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தங்கள் பிரிவிற்கான காரணத்தை பார்த்திபன் கூறியிருந்தார்.
அதில் அவர் கூறும்போது சீதா என் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தார். அதுதான் எங்கள் பிரிவிற்கு காரணம் என கூறியிருந்தார். இந்த நிலையில் இதற்கு பதிலளித்த சீதா மனைவி கணவன் மீது எதிர்பார்ப்பு வைப்பது சாதாரண விஷயம்.
எனவே அதனால் எல்லாம் எங்களுக்குள் பிரிவு ஏற்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
